search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாரதா கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடு
    X

    சாரதா கல்லூரியில் சக்தி பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட மாணவிகள்.

    சாரதா கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடு

    • சாரதா மகளிர் கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடுகள் 3 நாட்கள் நடைபெற்றது.
    • கல்லூரியின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வளர்ச்சி சங்கம் சார்பாக தொழில்நுட்ப உரை நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் சக்தி பூஜை சிறப்பு வழிபாடுகள் 3 நாட்கள் நடைபெற்றது. சக்தி பூஜையின் நிறைவாக 1-ந்தேதி சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சரஸ்வதி பூஜையின் மகிமை பற்றி கல்லூரியின் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப் பேராசிரியர் சங்கீதா சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    அகிம்சை தினம்

    தொடர்ந்து சாரதா மகளிர் கல்லூரியில் உலக அகிம்சை தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுடன் பல்வேறு துறை சார்ந்த 10 மாணவிகள் காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் காந்தியடிகளின் கோட்பாடுகள் பற்றி உரையாற்றினார். பொருளியல் துறை துணை பேராசிரியை சண்முகபிரியா காந்திய பொருளாதார சிந்தனைகள் என்ற தலைப்பிலும், இயற்பியல் துறை துணைப் பேராசிரியை பூமாதேவி காந்திய கோட்பாடு மற்றும் நடைமுறை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். சாரதா மகளிர் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் மேஜர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். இயற்பியல் துறை துணை பேராசிரியை நிரஞ்சனா தேவி நன்றி கூறினார்.

    சாரதா மகளிர் கல்லூரியின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் வளர்ச்சி சங்கம் சார்பாக தொழில்நுட்ப உரை நடைபெற்றது. கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். மேலும் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சோகோ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் கார்த்திக், இணைய பாதுகாப்பு பற்றி உரையாற்றினார். மேலும் கல்லூரியின் இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகர் மகிழ்வுரையாற்றினார். மேலும் கணினி பயன்பாட்டு துறை முனைவர் பார்வதிதேவி நன்றி கூறினார்.

    Next Story
    ×