search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangarankovil"

    • சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
    • ஊராட்சி தலைவரும், செயலாளரும் சேர்ந்து துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    தென்காசி:

    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

    இவரும், ஊராட்சி செயலாளரான சீனியம்மாள் என்பவரும் சேர்ந்து பெருமாள்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து அரசு ஆவணமாக காட்டி வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரன் கோவில் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரான சீனியம்மாளை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாமல் அதே பணியில் உள்ளதால் அந்த ஊராட்சியில் தொடர் முறைகேடுகள் நடப்பதாகவும், முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாள் முதல் ஊராட்சி செயலாளர் விடுமுறையில் உள்ளதால் பெருமாள்பட்டி பகுதியில் எந்தவிதமான அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


    • சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    இதில் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பரமகுரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மாரிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் திருவேங்கடம் மாரிமுத்து மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கரநாராயணசாமி கோவில் யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள்.
    • நேற்று கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கோவில் யானை உள்ளது. இந்த யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள். தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரால் 1997-ம் ஆண்டு கோவிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டது. கோமதி யானைக்கு நேற்று 28-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    மேலும் யானைக்கு பக்தர்கள் பழங்கள் வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து யானைக்கு அதிக அளவில் பழங்கள் வாங்கி கொடுத்து "கஜ" பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×