சங்கரன்கோவிலில் வாக்குச் சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.
காணொலி மூலமாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
காணொலி மூலமாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

சங்கரன்கோவில்:

வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

இதில் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பரமகுரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மாரிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் திருவேங்கடம் மாரிமுத்து மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com