என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samanatha ruth prabhu"

    • சமந்தாவின் டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தது.
    • இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

    பிரபல நடிகை சமந்தா டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி `சுபம்' என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரைப்படம் கடந்த மே 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்கள் பலரால் இப்படம் ரசிக்கப்பட்டது. அப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கதாப்பாத்திரம் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சமந்தா மீண்டும் 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார்.

    இவர் இதற்கு முன் ஓ பேபி என்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. சமந்தா தொடர்ந்து இந்தி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஃபேமிலி மான் சீசன் 2, சிட்டாடெல்; ஹனி பனி. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரக்த் பிரமந்த் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
    • இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த ”எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த "எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு 2016-ஆம் ஆண்டு நாகசைதன்யாவுடன் நடந்த திருமணத்தின் போது அணிந்திருந்த கவுனை அணிந்து வந்தார். அந்த கவுனில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

     

    இதுக்குறித்து ஆடைவடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எப்படி சமந்தாவின் கல்யாண கவுன் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். நடக்க எப்போதும் புதிய பாதைகள் உள்ளன. எப்பொழுதும் புதிய கதைகள் சொல்ல இருக்கிறது. சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய நினைவை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம் அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. என்ரு பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இது பற்றி அவரது ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் விரும்பினோம். அவருக்கு புதிய நினைவை ஏற்படுத்தவும் உதவினோம். அது அவரது திருமண கவுன்போன்று உருவாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×