search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saeed Anwar"

    • ரோகித் சர்மா இதுவரை 230 ஒருநாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்துள்ளார்.
    • ஒருநாள் போட்டியில் 29 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா அதில் ஏழு சதங்களை இங்கிலாந்தில் அடித்துள்ளார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்கவுள்ளார்.

    ரோகித் சர்மா இதுவரை 230 ஒருநாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்துள்ளார்.

    குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த ஏபிடிவில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சச்சின் (இந்தியா) சயித் அன்வர் (பாகிஸ்தான்) ஆகியோருடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    ஒருநாள் போட்டியில் 29 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா அதில் ஏழு சதங்களை இங்கிலாந்தில் அடித்துள்ளார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது ரோகித் ஒரு அரை சதம் உள்பட 5 சதம் அடித்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் தனது முதல் சதத்தை (123*) அடித்தார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நாட்டிங்ஹாமில் ரோகித் 137 ரன்கள் எடுத்தார்.

    சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏழு சதங்கள் அடித்தார். 42 போட்டிகளில் 1778 ரன்களுடன் ஜிம்பாப்வேக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக 2 மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒன்று.

    டி வில்லியர்ஸ் இந்தியாவில் 20 ஒருநாள் போட்டிகளில் 1125 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஏழு சதங்கள் அடித்தார்.

    பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சயீத் அன்வரும் டெண்டுல்கரைப் போலவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7 சதங்கள் அடித்துள்ளார். அவர் 51 ஆட்டங்களில் 11 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களுடன் 2179 ரன்கள் குவித்தார்.

    ரோகித் சர்மா இன்னும் ஒரு சதம் விளாசினால் இந்த மூன்று பேரின் சாதனையை முறியடிப்பார்.

    பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் 21 ஆண்டு கால சாதனையை 28 வயதான இடக்கை ஆட்டக்காரர் பஹார் ஜமான் தகர்த்துள்ளார். #FakharZaman #SaeedAnwar
    சயீத் அன்வர், 1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் வீரரின் தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அந்த 21 ஆண்டு கால சாதனையை 28 வயதான இடக்கை ஆட்டக்காரர் பஹார் ஜமான் தகர்த்துள்ளார்.



    இரட்டை செஞ்சுரி விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் பஹார் ஜமானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பஹார் ஜமான் சதம் அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டது நினைவு கூரத்தக்கது. #FakharZaman #SaeedAnwar
    ×