என் மலர்
நீங்கள் தேடியது "rummy"
- மகாராஷ்டிராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த மாணிக் ராவ் கோகடே வேளாண்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையே, சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாணிக்ராவ் கோகடே சின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது. கேம் விளையாட ஒருவருக்கு OTP தேவை. மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.
எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டைத் தவிர்க்க முயற்சித்தேன்.
ராஜினாமா கோரப்பட்டதற்கு என்ன நடந்தது என சொல்லுங்கள். நான் யாரையாவது துன்புறுத்தியிருக்கிறேனா? நான் ஏதாவது திருடிவிட்டேனா அல்லது விவசாயிகளுக்கு எதிராக முடிவு செய்துள்ளேனா? எனக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
- ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பல லட்சத்தை இழந்ததாக தெரிகிறது.
- ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. இதில் பல லட்சத்தை அவர் இழந்ததாக தெரிகிறது.
இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கிஷோர் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரம்மி விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.
- நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின்போது, "இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.
விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும்.
நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும்" என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ரம்மியை திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது?" என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.






