என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா மந்திரி"
- மகாராஷ்டிராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் ) பிரிவு ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவார் அணியானது எதிர்க்கட்சி வரிசையிலும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அஜித் பவார் அணி ஆளுங்கட்சியிலும் அங்கம் வகிக்கின்றன. இதில் அஜித் பவார் துணை மந்திரியாக ஆக பதவி வகித்து வருகிறார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த மாணிக் ராவ் கோகடே வேளாண்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கிடையே, சட்டசபை நடந்துகொண்டிருக்கும்போது மாணிக் ராவ் கோகடே தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது ரம்மி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாணிக்ராவ் கோகடே சின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆன்லைன் ரம்மி விளையாடத் தெரியாது. கேம் விளையாட ஒருவருக்கு OTP தேவை. மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.
எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.
எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டைத் தவிர்க்க முயற்சித்தேன்.
ராஜினாமா கோரப்பட்டதற்கு என்ன நடந்தது என சொல்லுங்கள். நான் யாரையாவது துன்புறுத்தியிருக்கிறேனா? நான் ஏதாவது திருடிவிட்டேனா அல்லது விவசாயிகளுக்கு எதிராக முடிவு செய்துள்ளேனா? எனக்கு குற்றப் பின்னணி உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
- மீன்களில் சிலவகை எண்ணெய் உள்ளன. இது கன்னத்தை மிருதுவானதாக வைத்திருக்கும்
- மற்றவர்கள் பார்த்தால், அவர்கள் ஈர்க்கப்டுவார்கள்
மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா மந்திரி விஜயகுமார் காவிட், தினந்தோறும் மீன் சாப்பிட்டால், ஐஸ்வர்யா ராய் போன்று கண்கள் அழகாக இருக்கும்'' எனக் கூறியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மந்திரி விஜயகுமார் காவிட், நந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அவர் அந்த வீடியோவில் ''தினந்தோறும் மீன் சாப்பிடுபவர்களின் கன்னங்கள் மிருதுவானதாக இருக்கும். கண்கள் பளிச்சென பளபளக்கும். யாராவது அவர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களால் ஈர்க்கப்படுவீர்கள்.
நான் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறினேனா?. அவர் மங்களூருவில் கடற்கரையோரம் வசித்தவர். தினமும் அவர் மீன் சாப்பிடிக்கனும். அவர் கண்களை பார்த்தீர்களா? அவரை போன்ற கண்களை நீங்கள் பெறுவீர்கள். மீனில் சிலவகை எண்ணெய் உள்ளன. அது உங்களுடைய கன்னங்களை மிருதுவாக வைத்திருக்கும்'' என்றார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமோல் மிட்கரி ''மந்திரி இதுபோன்று அற்பமான கருத்துகளை வெளிப்படுத்துவதைவிட, பழங்குடியின மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.'' என்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ., நிதேஷ் ராணே, ''நான் தினந்தோறும் மீன் சாப்டுகிறேன். என் கண்கள் ஐஸ்வர்யா ராய் கண்கள் போன்று இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து ஆராய்ச்சி ஏதும் உள்ளதா? என்று அவரிடம் கேட்க இருக்கிறேன்'' என்றார்.






