search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public exam result"

    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.
    • 12ம் தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி (நாளை) வெளியாகும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 14.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

    முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.08.2024 அன்று www.dgetngovin என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை

    14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
    • இதில் தேனி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    தேனி :

    தேனி மாவட்டத்தில் 7857 மாணவர்களும், 7246 மாணவிகளும் என மொத்தம் 15103 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் 6605 மாணவர்களும், 6837 மாணவிகளும் என மொத்தம் 13442 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் ஆகும்.

    தேனி மாவட்டத்தில் 7090 மாணவர்களும், 6943 மாணவிகளும் என மொத்தம் 14033 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் 6503 மாணவர்களும், 6743 மாணவிகளும் என மொத்தம் 13246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94 சதவீதம் ஆகும்.

    • அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 246 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி.
    • இயற்பியலில் 96.47 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதம் பேரும் தேர்ச்சி.

    தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.40 மணியளவில் வெளியிட்டார்.

    பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் எழுதினார்கள். மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேரும் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 96.32 சதவீதம் ஆகும்.

    மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.96 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 5.30 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,499. இதில் 2,628 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும்.

    அரசு பள்ளிகளில் 89.06 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.87 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும். தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.15 சதவீதம் பேரும் இரு பாலர் படிக்கும் பள்ளிகளில் 94.05 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகளில் 96.37 சதவீதம் பேரும், ஆண்கள் பள்ளிகளில் 86.60 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அறிவியல் பாட பிரிவுகளில் 95.51 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 92.51 சதவீதம் பேரும், கலைப்பிரிவுகளில் 85.13 சதவீதம் பேரும், தொழிற் பாடப்பிரிவுகளில் 84.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    முக்கிய பாடங்களான இயற்பியலில் 96.47 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 97.98 சதவீதம் பேரும், உயிரியல் பாடத்தில் 98.89 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தாவரவியல் பாடத்தில் 95.34 சதவீதம் பேரும், விலங்கியல் பாடத்தில் 96.01 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 96.31 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 93.79 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை இதில் 2824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.24 ஆகும். தேர்வு எழுதிய சிறை வாசிகளின் மொத்த எண்ணிக்கை 74. இதில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.94 ஆகும். 31,034 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர். மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும்.

    தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.4 சதவீதம் ஆகும்.

    மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.8 சதவீதம் தேர்ச்சி ஆகும். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார். அவர் தேர்ச்சி அடைந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார்

    இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தெரிவித்துள்ளதாவது:

    12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 24 ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

    12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் 2ந் தேதிமுதல் மறு தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது.  97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடமும், 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடமும்,  95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம்  பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


    • முதல் முறையாக ஒரே நாளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
    • மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு அனுப்பப்பட உள்ளது.

    10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார்7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக கூறப்பட்டது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பிற்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகின்றன. இரண்டு பொதுத் தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    தேர்வு முடிவுகளை

    www.tnresults.nic.in,

    www.dge1.tn.nic.in,

    www.dge2.tn.nic.in,

    www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

    இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட உள்ளது.

      சென்னை:

      எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் வெளியிடுகிறார்.

      பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

      மாணவ-மாணவிகளின் மதிப்பெண்களையும் உடனே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை அறிவித்துள்ளது.

      www.dge.tn.gov.in

      www.dgel.tn.gov.in

      www.dge2.tn.gov.in

      www.tnresults.nic.in

      ஆகிய தேர்வத்துறை, இணைய தளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

      அதே சமயத்தில் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை செல்போனுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      • தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
      • திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

      தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.

      சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற்றது.

      விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத் துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

      எனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

      10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக 11-ம் வகுப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்புகள் வரும் 27-ந் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

      ×