என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11th class"

    • கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.
    • சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    அரவேணு

    கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.

    இவரது மகன் பிரவீன்(வயது17). இவர் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரது தாயார் ஜெயலட்சுமி தேயிலை பறிக்கும் கூலித் தொழிலாளி ஆவார். பிரவீனுக்கு சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.

    இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்கள் இமானுவேல், செந்தில்கு மார் ஆகியோர் அவருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

    இதன் விளைவாக அவர் மாவட்ட, மாநில அணிகளுக்கு தேர்வு பெற்று போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தேர்வாகினர்.

    இதில் கோத்தகிரியை சேர்ந்த பிரவீனும் பங்கேற்றார். போட்டியின் முடிவில் அவர் தேசிய அணிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்தார்.

    இவர் வரும் மே மாதம் வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற உள்ள சர்வதேச ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய அணிக்கு தேர்வு பெற்றுள்ள பிரவீனை அப்பகுதி மக்களும், விளையாட்டு ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். மாணவனின் தயார் கூறுகையில்,

    பொருளாதார ரீதியாக பின்னடைவு இருப்பதால் அரசு மற்றும் பொது அமைப்புகள் ஏதாவது உதவி செய்தால் எனது மகன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு சிறந்த பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.
    • 12ம் தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதே போல் நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி (நாளை) வெளியாகும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2023-2024 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 14.08.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

    முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.08.2024 அன்று www.dgetngovin என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- பயன்படுத்தி மேல்நிலை முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை

    14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×