என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவர்களை முந்திய மாணவிகள்:  பிளஸ்-2 தேர்வில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி-  10-ம் வகுப்பில் 90.01 சதவீதம் பேர் தேர்ச்சி
    X

    (கோப்பு படம்)

    மாணவர்களை முந்திய மாணவிகள்: பிளஸ்-2 தேர்வில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி- 10-ம் வகுப்பில் 90.01 சதவீதம் பேர் தேர்ச்சி

    • அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 246 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி.
    • இயற்பியலில் 96.47 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதம் பேரும் தேர்ச்சி.

    தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.40 மணியளவில் வெளியிட்டார்.

    பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் எழுதினார்கள். மாணவிகள் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேரும் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 96.32 சதவீதம் ஆகும்.

    மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.96 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 5.30 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,499. இதில் 2,628 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும்.

    அரசு பள்ளிகளில் 89.06 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.87 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 246 ஆகும். தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.15 சதவீதம் பேரும் இரு பாலர் படிக்கும் பள்ளிகளில் 94.05 சதவீதம் பேரும், பெண்கள் பள்ளிகளில் 96.37 சதவீதம் பேரும், ஆண்கள் பள்ளிகளில் 86.60 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அறிவியல் பாட பிரிவுகளில் 95.51 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 92.51 சதவீதம் பேரும், கலைப்பிரிவுகளில் 85.13 சதவீதம் பேரும், தொழிற் பாடப்பிரிவுகளில் 84.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    முக்கிய பாடங்களான இயற்பியலில் 96.47 சதவீதம் பேரும், வேதியியல் பாடத்தில் 97.98 சதவீதம் பேரும், உயிரியல் பாடத்தில் 98.89 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 97.29 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தாவரவியல் பாடத்தில் 95.34 சதவீதம் பேரும், விலங்கியல் பாடத்தில் 96.01 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 99.39 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 96.31 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 93.79 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை இதில் 2824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.24 ஆகும். தேர்வு எழுதிய சிறை வாசிகளின் மொத்த எண்ணிக்கை 74. இதில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.94 ஆகும். 31,034 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர். மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும்.

    தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.4 சதவீதம் ஆகும்.

    மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.8 சதவீதம் தேர்ச்சி ஆகும். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார். அவர் தேர்ச்சி அடைந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.




    Next Story
    ×