என் மலர்

  நீங்கள் தேடியது "Pradeep Maharathy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign
  புவனேஷ்வர்:

  கடந்த 2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பெண் ஒருவர், மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சமீபத்தில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

  இது பற்றி கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி, கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மந்திரி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைத்தார்.  #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கற்பழிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி பிரதீப் மஹாரதி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டனர். #Congress #BJP #PradeepMaharathy
  புவனேஸ்வர்:

  ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பிப்லி கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து அந்தமாநில வேளாண்மைத் துறை மந்திரி பிரதீப் மஹாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து மந்திரி பிரதீப் பதவி விலகக்கோரி நேற்று காங்கிரஸ் மகளிர் அணியினர் துடைப்பத்துடன் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். தக்காளி, முட்டை ஆகியவற்றையும் மந்திரி வீட்டின் மீது வீசினர். இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.  பா.ஜனதா மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் மந்திரி பிரதீப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு இறுதி கெடு விதித்தனர். மந்திரியை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #Congress #BJP #PradeepMaharathy
  ×