search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger expectations"

    • சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பேய்குளம், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, இட்டேரி, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லைக்கு வந்தடைகிறது.
    • திசையன்விளையில் இருந்து காரியாண்டி வழியாக மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.10 மணிக்கு வந்தடையும் மற்றொரு அரசு பஸ் பருத்திப்பாடு, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடைகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பேய்குளம், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, இட்டேரி, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லைக்கு வந்தடைகிறது.

    பயணிகள் அவதி

    இதேபோல் திசையன்விளையில் இருந்து காரியாண்டி வழியாக மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.10 மணிக்கு வந்தடையும் மற்றொரு அரசு பஸ் பருத்திப்பாடு, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடைகிறது. இதற்கு அடுத்ததாக அதே வழித்தடத்தில் 7.20 மணிக்கு டவுன் பஸ் நெல்லைக்கு வருகிறது.

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தனியார் பஸ் இதே வழித்தடத்தில் இயங்குகிறது. இந்த பஸ்கள் மூலமாக நெல்லைக்கு பள்ளி, கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவ-மாணவிகள், மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் கொண்டு வரும் வியாபாரிகள், தனியார் நிறு வனங்களுக்கு பணி களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன் அடைந்த வருகின்றனர்.

    அடிக்கடி மாயம்

    இந்நிலையில் சாத்தான் குளத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.50 மணிக்கு மூலக்கரைப்பட்டிக்கு வரும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் என்று பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

    அதேபோல் திசையன் விளை வழியாக 7.10 மணிக்கு வரும் பஸ்சும் அவ்வப் போது மாயமாகி விடுவதாகவும், அதன்பின்னர் மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.20-க்கு வந்து சேரும் டவுன்பஸ்சில் ஏறி வந்தால் நெல்லைக்கு வந்து சேர நேரம் அதிக மாவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    கோரிக்கை

    எனவே காலை 6.50 மணி மற்றும் 7.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ் களை தவ றாமல் தி ன மும் இயக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் சிரமத்தை போக்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கிட வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்

    இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கி ழமை மாலை 6.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு எக்ஸ்பிரசானது, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜ பாளையம், சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    மும்மத தலங்கள்

    இந்த ரெயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் வழக்கமான பயணிகள் நலன்கருதி மதநல்லிணக்க தொடர் வண்டி சேவையாக (சபரிமலை ஐயப்பன் - நாகூர் ஆண்டவர் - வேளாங்கண்ணி தேவமாதா என மும்மதங்களின் புகழ்பெற்ற தலங்களை இணைத்திடும் ரெயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கிட வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தினசரி இயக்க கோரிக்கை

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவை முன்மொழியப்பட்டபோது தினசரி சேவையாக இயக்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் எர்ணாகுளம் யார்டு மேம்பாட்டு பணிகளை சுட்டிக்காட்டி வாரமிருமுறை சேவையாக இயக்கிடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    தற்போது பணிகள் முடிந்துவிட்டதால் தினசரி சேவையாக இயக்கிட வேண்டும். இந்த சேவையினை தொடர்ந்து இயக்கிட திருவனந்தபுரம், மதுரை, திருச்சி கோட்ட மேலாளர்கள் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர்:

    வருகிற 24ந்தேதி தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிறப்பு ெரயில் குறித்த விரிவான அறிவிப்பை தெற்கு ெரயில்வே வெளியிடவில்லை. கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. கோவை மற்றும் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழித்தடத்தில் செல்லும் ெரயில்களில் இருக்கைகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் துவங்கியுள்ளது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ெரயில்கள் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.

    இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ெரயில் இயக்க வாய்ப்புள்ளது.

    இந்த வார இறுதிக்குள் சிறப்பு ெரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது முன்பதிவு நிறைந்துள்ள பெட்டிகளில் தேவையிருப்பின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றனர்.

    ×