search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மும்மத தலங்களை இணைக்கும் வகையில் ஓடுகிறது:எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    மும்மத தலங்களை இணைக்கும் வகையில் ஓடுகிறது:எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு

    • அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கிட வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே செங்கோட்டை, தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்

    இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.40 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கி ழமை மாலை 6.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு எக்ஸ்பிரசானது, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோட்டயம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜ பாளையம், சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    மும்மத தலங்கள்

    இந்த ரெயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் வழக்கமான பயணிகள் நலன்கருதி மதநல்லிணக்க தொடர் வண்டி சேவையாக (சபரிமலை ஐயப்பன் - நாகூர் ஆண்டவர் - வேளாங்கண்ணி தேவமாதா என மும்மதங்களின் புகழ்பெற்ற தலங்களை இணைத்திடும் ரெயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிரந்தர தினசரி சேவையாக மாற்றி இயக்கிட வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தினசரி இயக்க கோரிக்கை

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவை முன்மொழியப்பட்டபோது தினசரி சேவையாக இயக்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் எர்ணாகுளம் யார்டு மேம்பாட்டு பணிகளை சுட்டிக்காட்டி வாரமிருமுறை சேவையாக இயக்கிடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    தற்போது பணிகள் முடிந்துவிட்டதால் தினசரி சேவையாக இயக்கிட வேண்டும். இந்த சேவையினை தொடர்ந்து இயக்கிட திருவனந்தபுரம், மதுரை, திருச்சி கோட்ட மேலாளர்கள் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×