என் மலர்
நீங்கள் தேடியது "paneer sukka"
- உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாக பனீர் உள்ளது.
- 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக செய்யப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது'.
இந்திய சைவ உணவுகளில், பனீரின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. புரதச்சத்தின் இருப்பிடமான இந்தப் பாலாடைக்கட்டி, பலவகை குழம்புகள் மற்றும் வறுவல்களில் சுவையைக் கூட்டுகிறது. அந்த வரிசையில் கேரளாவின் பிரபலமான 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது' என்கிற வித்யாசமான சைவ உணவு. வாழை இலையின் தனித்துவமான நறுமணம், சின்ன வெங்காயம் மற்றும் பாரம்பரிய மசாலாப் பொருட்களின் கலவையில், பனீர் மென்மையாக வேகவைக்கப்பட்டுப் பரிமாறப்படும் இந்த உணவு, சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான கலவையாகும். 'பனீர் பொளிச்சது' செய்முறையை, பிரபல செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

மசாலா தயாரித்தல்
* ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உடைத்த உளுந்து, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறாமல் ஓரளவுக்கு வேக வைக்கவும்.
* நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்து, மூடிபோட்டு 30-40 வினாடிகள் வேக வைக்கவும். சின்ன வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மசாலா பைண்டிங் கன்சிஸ்டன்சிக்கு வர நன்கு கிளறவும்.
* இந்த நிலையில், நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலையை முழுதாகப் போடாமல் நறுக்கிச் சேர்ப்பது நல்லது.
* பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து மசாலாவை மீண்டும் மூடிபோட்டு 30 வினாடிகள் வேக வைக்கவும்.
* மசாலா ரெடி ஆனதும், அடுப்பை அணைத்து, சிறிது சூடு ஆறிய பிறகு, வாசனைக்காக ஒரு சிட்டிகை சீரகப்பொடி மற்றும் காரத்துக்காக ஒரு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பனீர் பொளிச்சது செய்முறை
* வாழை இலையைச் சுத்தம் செய்து, இலையின் மேல் சிறிதளவு ஏற்கனவே நாம் தயாரித்து வைத்துள்ள மசாலாவைத் தடவவும்.
* பிறகு வாழை இலையின் மேல், 2 மி.மீ தடிமனில் நறுக்கிய பனீர் துண்டை வைத்து, அதன் இருபுறமும் மசாலாவை மீண்டும் நன்றாகத் தடவவும்.
* மசாலா தடவிய பனீரை வாழை இலையில் வைத்துப் பொட்டலமாகச் சுற்றவும்.
* பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் சற்றே எண்ணெய் விட்டு, வாழை இலையால் சுற்றப்பட்ட பனீரை வேக வைக்கவும்.
* மடிப்புப் பகுதி முதலில் கீழே இருக்கும்படி வைத்து, இலை ஒட்டிப் பிடிப்பதற்காக, மூடி போட்டு ஒரு பக்கம் 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* பின்பு திருப்பிப் போட்டு, அடுத்த பக்கமும் 2 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது வாழை இலை கிரிஸ்பியாக மாறி பனீர் பொளிச்சது தயாராகி விடும்.
* பனீர் பொளிச்சதைச் சூடாகப் பரிமாறவும். வாழை இலையைத் திறந்து சாப்பிடும் போது வரும் வாசம் கூடுதல் சுவையைக் கொடுக்கும். கூடவே, ஆனியன் ரிங்ஸ் மற்றும் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பனீர் பொளிச்சது
ஆரோக்கிய நன்மைகள்
* பனீர் உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாகும். தசை வளர்ச்சி, திசுக்கள் பழுது பார்த்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் பராமரிப்புக்கு இது சிறந்தது. குறிப்பாக இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும். மேலும், இது பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
* சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கு நன்மை பயக்கும். இது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை வழங்குவதோடு, மூளையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக தக்காளி சேர்க்காமல் சின்ன வெங்காயத்தை மட்டும் பயன்படுத்துவது இந்த உணவின் பாரம்பரிய முறையையும், ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.
* வாழை இலையில் சமைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் கலந்து, அதன் மூலம் ஆரோக்கியப் பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இலையின் வாசம் உணவுக்குச் சிறந்த நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கிறது.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான 'பனீர் பொளிச்சது' நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவாக அமையும்.
பன்னீர் - 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு

செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும்.
இறக்கும்போது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.






