search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Pakistan PM Imran Khan"

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #ImranKhan #LiKeqiang
  பீஜிங்:

  வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

  பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
   
  தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் பாகிஸ்தானுக்கு குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

  இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சீனா வந்துள்ளார்.

  தலைநகர் பீஜிங்-கில் இன்று சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

  சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தவும்  இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் சீன அரசு தயாராக இருப்பதாக பிரதமர் லி கெக்கியாங் குறிப்பிட்டார்.  முன்னதாக நேற்று சீனா துணை அதிபர் வாங் கிஷான் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். #Chinesepremier #Chinesepremiermeets #PakistaniPM #ImranKhan #LiKeqiang
  இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் மூண்டால் எனது கட்டுப்பாட்டிலோ இந்திய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Modiscontrol #ImranKhan
  இஸ்லாமாபாத்:

  இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் போர்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

  இதுவரை உலகில் நடந்த அத்தனை போர்களும் தவறான கணிப்பில்தான் நடந்துள்ளன. போர்களை தொடங்கியவர்களால் அது எங்கே போய் முடியும்? என்பதை யூகிக்க தெரியவில்லை. எனவே, உங்களிடமும், எங்களிடமும் உள்ள ஆயுதங்களை வைத்துகொண்டு தவறான கணிப்புகளை நாம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை நான் இந்தியாவின் முன்வைக்கிறேன்.  அப்படி இருநாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. பயங்கரவாதம் தொடர்பாக நீங்கள் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அறிவார்த்தமாக யோசித்து, நாம் அமர்ந்து பேச வேண்டும் என இம்ரான் கான் கூறினார்.
  #Indopakconflict #Modiscontrol #ImranKhan
  மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மதுவை இன்று சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டை மீள்கட்டமைப்பு செய்ய அந்நாட்டின் பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக தெரிவித்தார். #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
  கோலாலம்பூர்:

  பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

  உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

  சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

  பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

  இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. 

  பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்  சென்றார். 

  இந்நிலையில், அடுத்தகட்டமாக இருநாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு வந்துள்ள இம்ரான் கான் இன்று கோலாலம்பூர் நகரில் அந்நாட்டின் பிரதமர் மஹதிர் முஹம்மதுவை சந்தித்துப் பேசினார்.

  பின்னர் அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், (மஹதிர்) உங்களைப் போலவே ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி நானும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். கடன் சுமையில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பதற்காக மலேசியாவின் முன்னேற்றப் பாதையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

  குறிப்பாக, மலேசியா பிரதமராக மஹதிர் முஹம்மது(93) பொறுப்பேற்ற பின்னர்  தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, இந்நாட்டை பொருளாதார ரீதியாகவும், முன்னேற்றிய அவரது அனுபவத்தின் மூலமாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் எனவும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

  மேலும், மலேசியா நாட்டின் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை அலுவலகத்தையும் இம்ரான் கான் இன்று சென்று பார்வையிட்டார். 

  இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 51 ஆண்டுகால வரலாற்றில் இந்த அலுவலகத்துக்கு வருகைதந்த முதல் வெளிநாட்டு பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானை மலேசியா ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை ஆணையாளர் முஹம்மது ஷுக்ரி அப்துல் வரவேற்று இந்த அமைப்பு இயங்கிவரும் முறைபற்றி விளக்கம் அளித்தார்.

  ஊழல் தொடர்பாக இந்த அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதும் பண உச்சவரம்பு உள்ளதா? என்ற இம்ரான் கானின் சந்தேகத்துக்கு பதில் அளித்த அவர், 5 ரிங்கிட் (இந்திய மதிப்புக்கு 85 ரூபாய்) ஊழல் என்றாலும் நாங்கள் விசாரணை நடத்த உரிமை உண்டு என்று விளக்கம் அளித்தார்.

  நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டா? என்ற இம்ரான் கானின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த முஹம்மது ஷுக்ரி அப்துல், எங்கள் நாட்டின் சட்டத்தின்முன் அனைவரும் சமம். நாங்கள் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. 

  தேவைப்பட்டால் உங்கள் நாட்டின் (பாகிஸ்தான்) ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளை எங்களிடம் அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
  சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். #ImranKhaninChina
  பெய்ஜிங்:

  பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.

  இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

  சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்

  பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhaninChina
  ×