என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan ISI"
- பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
- தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.
புதுடெல்லி:
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடா்ந்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உண்டாகும் சூழலுக்கு காரணமான இந்த தாக்குதல் வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த 27-ந் தேதி ஏற்றது. தாக்குதலை தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகள் குறித்து தகவல்களை சேகரிக்க 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐ.ஜி. தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டு அவா்கள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. தலைமை இயக்குனர் சதானந்த் தாத்தே நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மூலம் இந்த சதி திட்டத்தை ஐ.எஸ்.ஐ. நடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணையில் இந்த தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளான ஹாஷ்மி மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், தங்குமிடம், வழி, உளவு பார்த்தல் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் தொழிலாளர்களிடம் பெற்றதும் தெரிய வந்தது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. 3 செயற்கைகோள் தொலைபேசிகள் செயல்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இரண்டு தொலைபேசியில் இருந்து சிக்னல்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு 24-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவில் நடைபெறும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் 8-வது நாளாக தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டது. குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்கினார்கள். இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி பயங்கரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்திய அரசின் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏஜெண்ட்கள் மூலம் வாங்கிக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அவர்கள் மூலம் விநியோகம் செய்வது தெரியவந்துள்ளது.
இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ,500 ரூ 2000 மற்றும் 50 ரூபாய் என அச்சடிக்கப்பட்டு டி-கம்பெனி முகவர்களின் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முகவர்கள் இந்த அமைப்பிற்கு உதவி செய்தாக கூறியுள்ளது.
உளவுத்துறை அமைப்புகள் ஏற்கனவே கடத்தப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை ஈடுபட்டு வருகிறது.






