search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Painting exhibition"

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
    • மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சித்திர கூடத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது. இதில் மாணவ -மாணவிகளின் விதவிதமான ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளின் ஓவிய படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் ராஜா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் தியாகராஜன் செய்து இருந்தார்.

    • கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஓவியர்கள் வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நாளை (ஞாயிற்றுக்கி ழமை) ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இதில் 83 ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்துகின்றனர். ஓவியங்களை காட்சிப்படுத்த ஒவ்வொருவருக்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து வரும் ஓவியர்கள், வாட்டர் கவர், ஆக்ரிவிக், டிஜிட்டல் ஓவியம் மற்றும் சிறிய சிற்பங்களை காட்சிப் படுத்துகிறார்கள்.

    பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    • மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.
    • கண்காட்சியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி ஓவியர்கொண்டைய ராஜுவின் நினைவாகவும், கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதனை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அ.ஷன்மதி, அ.ரித்தீஷ்ராம், கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., ஓவியர் எஸ்.கார்த்திகை செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இதில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள், சித்திரம் கலைக்கூட மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.

    மேலும் ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம், போஸ்டர் கலர் ஓவியங்கள், பென்சில், பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மெட்டல் எம்பாஸ்ஸிங் மற்றும் நெட்டி வேலைப்பாடு உள்ளிட்ட அறிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

    சித்திரம் ஓவியர் எஸ்.கார்த்திகைசெல்வத்தின் ஓவிய மாமேதை கொண்டையராஜு ஓவியக்கலை சொல்லும் கோவில்பட்டி என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வெளியிட எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

    கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்களான சீனிவாசன், ஞானகுரு, முருகபூபதி, வேல்முருகன், ஜெயக்குமார், சோமசுந்தரம், மோகன்குமார், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காலண்டர் ஓவியர்களான செந்தியப்பன், பாஸ்கர், மாரியப்பன், கண்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர்கள் காளிதாசமுருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி), வக்கீல் சம்பத்குமார், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி துறைப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சித்திரம் கலைக்கூட ஓவியர் கார்த்திகை செல்வம், கலைக்கூட ஓவிய மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×