search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Engineering College"

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அளவிலான மாபெரும் வினாடி வினா போட்டி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து 9-வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.

    கணிதத் துறை உதவி பேராசிரியை கீதா வரவேற்றார். இதில் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ேபசியதாவது:-

    கிராமப்புற மாணவர்க ளின் முன்னேற்றத்திற்காக கல்லூரி முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை விளக்கி கல்வியின் அடிப்படை நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். போட்டிதேர்வுகளின் போது கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் எவ்வாறு முழு திறன்களையும் வெளிப் படுத்துவது என்பதற்கு இது போன்ற வினாடி வினா போட்டிகள் உதவும் என விளக்கி பேசினார்.

    இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார்.

    தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாண வர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன்.எம்.ஏ. நீலகண்டன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசு வழங்கினர். மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பசின் மாண வர்கள் முத்து சிவகாதிர் மற்றும் அஸ்வின் சிவா முதல்பரிசு ரூ.25 ஆயிரத்தை யும், நெல்லை புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா மற்றும் வீ.பி.ஹரினி 2-ம் பரிசு ரூ.15 ஆயிரத்தையும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பொன்செல்வ ஜெயந்த் மற்றும் ஜாய்சன் ராஜா ஆகியோர் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தையும் தட்டி சென்றனர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்.சித்திரைக்குமார், எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், எம்.அரவிந்த், எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4ன் கீழ் புதியதாக தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 153 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு கடந்த ஜூலை 19-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை 60 நாட்கள் நடைபெற்ற நில அளவை பயிற்சி முகாம் நிறைவு விழா கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    விழாவில், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. எல்.ஜேன் கிறிஸ்டி பாய் தலைமை தாங்கினார். மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் ஆர்.சீனிவாசகன் முன்னிலை வகித்தார். நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலும், இவ்விழாவில் கல்லூரி இயக்குனர்எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கோவில்பட்டி தாசில்தார் கே.லெனின் மற்றும் மாவட்ட பராமரிப்பு ஆய்வாளர் எஸ்.சுடலைமுத்து உள்பட கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது. மாவட்ட நில அளவைத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.

    • வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
    • துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளா கத்தில் கையெழுத்தானது.

    வேலைவாய்ப்பு

    இதில், கல்லூரி இயக்குநர் எஸ். சண்முகவேல், முதல்வர் கே. காளிதாச முருகவேல், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தைவான் கிளையின் மனிதவளத்துறை மேலாளர் பால் மற்றும் இந்திய மனிதவளத்துறை அதிகாரி சுவாதி கோயல் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கா னிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

    கலந்துரையாடல்

    முன்னதாக, கல்லூரி முதல்வர் வரவேற்று பேசினார். மின்னியல் மற்றும் மின்னணு பொறி யியல் துறைத்தலைவர் எம். வில்ஜூஸ் இருதயராஜன், எந்திர பொறியியல் துறை தலைவர் எஸ். அய்யாராஜா, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்துறை தலைவர் எஸ். தமிழ்செல்வி, மற்றும் துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரி களில் கலந்துரையாடல் நடைபெற்றது.

    முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் வி. மணிமாறன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி தகவல் தொழில் நுட்ப பொறியியல்துறை தலைவர் கே. சீனிவாசகன், வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப் பாளர்கள் செய்திருந்தனர்.

    • கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    கோவில்பட்டி:-

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு சார்பாக 'ரெய்னாக்ஸ்-23' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 2 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரியின் முன்னாள் மாணவரும் நெல்லை, ஆல்பா பிசினஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இயக்குனர், மொபியோனிக்ஸ் ஏஐ-யின் இணை நிறுவனருமான பி.சிவகுரு ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தற்போதைய தொழில்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அவர் தகவல் தொழிநுட்ப துறை கூட்டமைப்பிற்கான யூடியூப் சேனலையும், காணொலியையும் தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் இயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால போக்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சிதம்பரம் இ-காமர்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்ஹோம் அப்ளிகேஷன்களில் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பேசினார்.

    இரண்டாம் நாளில், மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிககள் நடத்தப்பட்டது, மேலும் மாணவ- மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தனர். இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முன்னதாக, மாணவி ஆர்த்தி வரவேற்றார். மாணவி ஆர்த்தி அபிராமி கருத்தரங்கம் பற்றி எடுத்துரைத்தார். மாணவர் ஆனந்த் விழா தலைமையுரை வழங்கினார். மாணவி கரிஷ்மா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இறுதியாக மாணவி கவிதா நன்றி கூறினார்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படியும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் கே.ஜி.ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலின்படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, ரம்யா, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    • தேசிய மாணவர் படையின் 75-வது பவளவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’எனும் சுடர் ஓட்டம் நடைபெறுகின்றது
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் என சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு இந்த ஓட்டத்தை சிறப்பிக்கின்றனர்.

    கோவில்பட்டி:

    தேசிய மாணவர் படை (என்.சி.சி.)யின் 75-வது பவளவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்துடன் என்.சி.சி. 'யூனிட்டி ஃப்ளேம் ரன்' எனும் சுடர் ஓட்டம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, வருகிற ஜனவரி 18-ந் தேதி புதுடெல்லி, இந்தியா கேட் வரை சுமார் 3000 கிலோமீட்டர்கள், நாள் ஒன்றுக்கு 50 கிலோமீட்டர் தூரம் என தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறுகின்றது.

    ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வலியுறுத்தி நடைபெறும் இச்சுடர் ஓட்டம், இந்தியாவின் மிகப்பெரிய சுடர் ஓட்டமாகவும் நமது இளைஞர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் ராணுவத்தில் சேர உந்துதலாகவும் இருக்கும் எனக்கருதப்படுகிறது. இந்தியாவின் அனைத்து ராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ -மாணவி யர்கள் என சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு இந்த ஓட்டத்தை சிறப்பிக்கின்றனர்.

    கன்னியாகுமரியில் கடந்த 20-ந் தேதி தொடங்கிய இச்சுடர் ஓட்டம் நேற்று கோவில்பட்டி வந்தடைந்தது. நிகழ்ச்சிக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் காளிதாஸ் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒற்றுமை சுடர் ஓட்ட அணியை கொடி அசைத்து வரவேற்றார். இதில் சேனா வீர பதக்க விருது பெற்ற கர்னல் கே.எஸ்.பத்வார், கர்னல் டி.எஸ்.மாலிக், கர்னல் ஏ.என்.ஜா, லெப்டினன்ட் கர்னல் நவீன் யாதவ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஓடினர். மேலும், இந்நிகழ்வில் திருநெல்வேலி, 9 (த. நா) சிக்னல் கம்பெனி லெப்டினன்ட் கர்னல் சின்ஹாவும் கலந்து கொண்டார்.

    கோவில்பட்டியிலிருந்து 'யூனிட்டி ஃபிளேம் ரன்' சுடர் நகரும் நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நேஷனல் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படைப்பிரிவு சிறப்பாக செய்திருந்தது. மேலும் இன்று கல்லூரியில் தங்கியிருக்கும் சுடர் ஓட்ட அணியினரை, கல்லூரி இயக்குனர் சண்முகவேல் சுடர் ஓட்ட ஜோதி ஏற்றி கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார். இதில் நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள் சுமார் 130-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர் களின் வழிகாட்டுதலின்படி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள் கே.கணேசன், என்.பி.பிரகாஷ், ஜி.ஆர்.ஹேமலட்சுமி மற்றும் டி.சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.
    • கண்காட்சியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி ஓவியர்கொண்டைய ராஜுவின் நினைவாகவும், கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதனை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, அ.ஷன்மதி, அ.ரித்தீஷ்ராம், கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., ஓவியர் எஸ்.கார்த்திகை செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இதில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள், சித்திரம் கலைக்கூட மாணவர்களின் படைப்புகள், வெளிப்புற ஓவியர்களின் படைப்புகள், கே.ஆர்.கல்வி குழுமங்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.

    மேலும் ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம், போஸ்டர் கலர் ஓவியங்கள், பென்சில், பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மெட்டல் எம்பாஸ்ஸிங் மற்றும் நெட்டி வேலைப்பாடு உள்ளிட்ட அறிய படைப்புகள் இடம் பெற்றிருந்தன.

    சித்திரம் ஓவியர் எஸ்.கார்த்திகைசெல்வத்தின் ஓவிய மாமேதை கொண்டையராஜு ஓவியக்கலை சொல்லும் கோவில்பட்டி என்ற புத்தகத்தின் முதல் பிரதியை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வெளியிட எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

    கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்களான சீனிவாசன், ஞானகுரு, முருகபூபதி, வேல்முருகன், ஜெயக்குமார், சோமசுந்தரம், மோகன்குமார், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் காலண்டர் ஓவியர்களான செந்தியப்பன், பாஸ்கர், மாரியப்பன், கண்ணன், சிவசுப்பிரமணியன் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர்கள் காளிதாசமுருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி), வக்கீல் சம்பத்குமார், தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன், கல்லூரி துறைப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சித்திரம் கலைக்கூட ஓவியர் கார்த்திகை செல்வம், கலைக்கூட ஓவிய மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பாக தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் "ஜியோன்டஸ்-22" நடைபெற்றது. 3-ம் ஆண்டு மாணவர், தகவல் தொழில்நுட்ப துறை மன்ற துணைத்தலைவர் பாரதி வரவேற்றார்.

    இரண்டாம் ஆண்டு மாணவி கவிஷ்கா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை இன்ட்ரான்சாப்ட் எல்எல்பி, தொழில்நுட்ப தலைவருமான பால வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நான் இருப்பதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். போட்டிகளில் வெற்றியோ, தோல்வியோ முக்கியமில்லை. நமது பங்களிப்பு தான் மிகவும் அவசியம் என்றார். மிடில்வேர் தொழில்நுட்பத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

    முடிவில் மாணவர்களின் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். மூன்றாம் ஆண்டு மாணவர், தகவல் தொழில்நுட்பத்துறை மன்ற செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

    இத்தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும், மாணவர்களுக்கு டை இன், மைண்ட் பெஸ்ட், ஹோசன் ஜி, டிரிக்ட்பக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் முனைவர் சண்முகவேல், முதல்வர் முனைவர் காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படியும்

    மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர்ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலின்படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, மணிமேகலை, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×