search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு  வினாடி வினா போட்டி
    X

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அளவிலான மாபெரும் வினாடி வினா போட்டி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து 9-வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.

    கணிதத் துறை உதவி பேராசிரியை கீதா வரவேற்றார். இதில் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ேபசியதாவது:-

    கிராமப்புற மாணவர்க ளின் முன்னேற்றத்திற்காக கல்லூரி முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை விளக்கி கல்வியின் அடிப்படை நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். போட்டிதேர்வுகளின் போது கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் எவ்வாறு முழு திறன்களையும் வெளிப் படுத்துவது என்பதற்கு இது போன்ற வினாடி வினா போட்டிகள் உதவும் என விளக்கி பேசினார்.

    இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார்.

    தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாண வர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன்.எம்.ஏ. நீலகண்டன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசு வழங்கினர். மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பசின் மாண வர்கள் முத்து சிவகாதிர் மற்றும் அஸ்வின் சிவா முதல்பரிசு ரூ.25 ஆயிரத்தை யும், நெல்லை புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா மற்றும் வீ.பி.ஹரினி 2-ம் பரிசு ரூ.15 ஆயிரத்தையும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பொன்செல்வ ஜெயந்த் மற்றும் ஜாய்சன் ராஜா ஆகியோர் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தையும் தட்டி சென்றனர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்.சித்திரைக்குமார், எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், எம்.அரவிந்த், எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×