search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NYAY scheme"

    பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #RahulGandhi #NYAY #Modi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஐந்து கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும்  2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.மீதமுள்ள இரண்டு கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, பிரதமர் மோடி அவர்களை உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) தொடர்பான விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் கடந்த 5 கட்டமாக நடைபெற்ற தேர்தல்களில் முதியோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #NYAY #Modi
    ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்தார்.



    இந்நிலையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷீலா தீட்சித், வறுமையை அடியோடு ஒழிக்க இந்த திட்டம் மிகப்பெரிய ஆயுதமாக அமையும். ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது. உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாகவும் இது இருக்கும். ராகுலின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    ×