search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north korea president"

    பின்லாந்து நாட்டில் நாளை ரஷிய அதிபர் புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting
    லண்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

     இந்தநிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி (நாளை) இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், டிரம்ப்பும் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்போது பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை பின்லாந்து நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நான் போகவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் என தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் தொணியில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    அவரது ஆர்வமின்மையை பார்க்கும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னுடன் சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைபோல், ஹெல்சின்கியில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையும் பெரிய பலன்களை அளிக்காமல் போகலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting 
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் 12-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரியவந்துள்ளது. #KimJongUn #DonaldTrump
    சிங்கப்பூர்:

    வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சிங்கப்பூர் நாட்டின் எந்த பகுதியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது? என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இதற்கிடையில், சிங்கப்பூர் அரசு சில பகுதிகளை மிகுந்த பாதுகாப்புக்குரிய - முக்கிய சந்திப்புக்கான பகுதிகளாக நேற்று அடையாளப்படுத்தி இருந்தது.

    சிங்கப்பூரில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கான பொது அறிவிப்பையும் சிங்கப்பூர் அரசின் இணையதளம் வெளியிட்டிருந்தது.


    இந்நிலையில், சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தற்போது தெரியவந்துள்ளது.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூருக்கு வருகின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை வரும் 10 முதல் 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

    இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #Singaporesummit #KimJongUn #DonaldTrump #Sentosa island
    ×