search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian worker"

    • போலீசார் தேடியபோது இசக்கிராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது
    • ஆறுமுகரெட்டி நாங்குநேரி பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் இசக்கிராஜ்(வயது 59). தொழிலாளி.

    ஆற்றில் மூழ்கி பலி

    இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம். சம்பவத்தன்று ஆற்றில் குளிக்க மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கரையில் அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது.

    உடனே வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேடியபோது இசக்கிராஜ் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாங்குநேரி

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நரங்கசுரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகரெட்டி(வயது 60). இவர் நாங்குநேரி பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று நாங்குநேரி தெப்பகுளத்திற்கு சென்ற அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார்.

    அங்கு பிணமாக மிதந்து கொண்டிருந்த அவரது உடலை நாங்குநேரி போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×