search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Railway Station"

    • ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர்.

    ரெயில் நிலையங்களில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் சிலர் கேட்பதில்லை. இந்நிலையில் மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரீமிக்ஸ் பாடல் ஒன்றுக்கு இளம்பெண் நடமாடுகிறார். ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

    ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ பல்வேறு கருத்துக்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர். சிலர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடன திறமை மற்றும் தைரியத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘பாட்’ ஓட்டல் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘பாட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது.

    சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில் படுத்து தூங்கும் அளவுக்கும், உட்கார்ந்து இருக்கும் அளவுக்கும் இடம் இருக்கும்.

    இந்த அறையில் டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை உள்ளிட்ட வசதிகள் உலகத்தரத்தில் இடம்பெற்று இருக்கும்.

    ரெயில் பயணிகள் 12 மணி நேரம் தங்குவதற்கு இந்த அறையில் ரூ.999 கட்டணமாகும். 24 மணி நேரத்திற்கு ரூ.1,999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த அறைகளில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்டிரலில் இந்த ‘பாட்’ ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.
    மும்பையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #MumbaiRains #MHRains
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

    நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் சுமார் 2000 பயணிகள் மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் ஆளுயரத்திற்கு மழை நீர் தேங்கியிருப்பதால் அந்த ரெயில் நிலையங்களில் சிக்கியிருக்கும் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.



    இதையடுத்து மேற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த ரெயில் நிலையங்களுக்கு கடற்படை வீரர்கள் இன்று காலையில் விரைந்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் கடந்து செல்லக்கூடிய மிக உயரமான வாகனங்களில் வந்த அவர்கள், பயணிகளை மீட்கும் பணியை தொடங்கி உள்ளனர். #MumbaiRains #MHRains
    மும்பையில் ரெயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் ரெயில்வே காவலர் தகாதமுறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியானதால் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    மும்பை:

    மும்பை கல்யான் ரெயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் இன்று ஒரு பெண் தன்னுடன் வந்தவருடன் அமர்ந்திருந்தபோது, அருகாமையில் அமர்ந்திருந்த ரெயில்வே காவலர் ஒருவர் அந்தப் பெண்ணின் தோள்பட்டையில் கை வைப்பதை பார்த்த சிலர் இந்த அத்துமீறலை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

    இதைகண்ட மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் அந்த காவலரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அந்த காவலர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த  மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் சச்சின் பலோடே, இந்த சம்பவம் தொடர்பாக, அந்த காவலர் மீது புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
    ×