search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangaluru"

    • மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணிக்கு வந்து செல்லும்.

    திருப்பூர் :

    மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    சந்திரகாச்சியில் இருந்து மங்களூரு செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22851) வியாழக்கிழமை தோறும் மதியம் 2.55 மணிக்கு சந்திரகாச்சியில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்றடையும். இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயில் திருப்பூருக்கு நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு வந்து செல்லும். இதுபோல் மங்களூரு - சந்திரகாச்சி செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22852) சனிக்கிழமை தோறும் மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை தோறும் மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

    வருகிற 16-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.13 மணிக்கு திருப்பூருக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநிலம் மங்களூரில் காந்தத்தை விழுங்கிய சிறுமிக்கு காந்தம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிய போது பொம்மையில் இருந்த காந்தத்தை விழுங்கி விட்டாள். இதனால் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை மங்களூரில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல டாக்டர் ஜெயதீர்த்தா ஜோஷி ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்த போது குழந்தையின் வலது நுரையீரல் பகுதியில் மூச்சு குழாயில் அந்த காந்தம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    எனவே அதை வெளியே எடுப்பது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை நடத்தியது. விழுங்கப்பட்ட காந்தத்தால் சிறுமியின் மூச்சு குழாயில் காயம் மற்றும் ரத்தக்கசிவு உள்ளதா? என்பதை கண்டறிய ‘பிரோன் ஜோஸ் கோப்’ கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.

    ‘எண்டோஸ்கோப்பி’ கருவி மூலம் காந்தத்தை வெளியே எடுக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என கருதி அம்முடிவு கைவிடப்பட்டது. இது போன்று பல ஆலோசனைகள் பெறப்பட்டது.

    முடிவில் மயக்க மருந்து கொடுத்து சக்தி வாய்ந்த மற்றொரு காந்தம் மூலம் விழுங்கிய காந்தத்தை வெளியே எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மயக்க மருந்து நிபுணர் டாக்டர்களிடம் இந்த ஆலோசனையை வழங்கினார்.

    இறுதியில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் மயக்க நிலையில் வைத்து மற்றொரு சக்தி வாய்ந்த காந்தத்தை மூச்சு குழாய்க்குள் செலுத்தி விழுங்கப்பட்ட காந்தம் வெளியே எடுக்கப்பட்டது. அதையடுத்து சிறுமி சகஜ நிலைக்கு வந்து உயிர் பிழைத்தாள். சிகிச்சை முடிந்து மறுநாள் அவள் வீடு திரும்பினாள்.

    டாக்டர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் நன்றி கூறினர். #Magnet
    ×