என் மலர்

  நீங்கள் தேடியது "L.Ganesan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
  • விரைந்து முழு உடல்நலன் பெற்று, அன்றாடப் பணிகளுக்குத் திரும்ப வாழ்த்து.

  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கான ஆளுநருமான இல.கணேசனுக்கு கடந்த 1-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.

  இந்த நிலையில் ஆளுநர் இல.கணேசனுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல் நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  ×