search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knife punch"

    • மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு 4 பேரும் நடந்து சென்றனர்.
    • ஆத்திரம் அடைந்த மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தினார்.

    கோவை:

    கோவை கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி.

    சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர்.

    மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு 4 பேரும் நடந்து சென்றனர். அப்போது பிரசாந்திற்கும், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது திடீரென தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தினார். சதிஷ் மற்றும் சபரி அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாறியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து 3 ேபரும் தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பிரசாந்த் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோஜ், சதிஷ், சபரி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    • குடிபோதையில் தகராறு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் துரைநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், (வயது 40) இவருக்கும் அவரது சகோதரி மகன் கார்த்திக் (வயது23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த கார்த்திக் வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது வீட்டில் இருந்த அவரது உறவினர் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி அச்சுதன் (வயது47) எதற்காக மாமா வீட்டில் வந்து குடித்துவிட்டு தகராறு செய்கிறார் என கார்த்தியிடம் கேட்டுள்ளார்.

    அதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அச்சுதனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அச்சுதனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் அச்சுதன் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் டவுா்ன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    திருவள்ளூர் அருகே வேன் முன்பு ஆட்டோ நிறுத்தியதை தட்டிக் கேட்ட தந்தை-மகனுக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் முரசொலி மாறன் நகரை சேர்ந்தவர் வெங்கடரமணன் (60). நேற்று வெங்கட்ராமன் தனது உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட ஊட்டிச் செல்வதற்காக வேன் ஏற்பாடு செய்திருந்தார்.

    அந்த வேன் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வேனின் முன்பு ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட வெங்கட்ரமணன் அந்த ஆட்டோவை எடுக்குமாறு கூறினார்.

    அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ரகு அவரது உறவினர் சண்முகம் ஆகியோர் அவருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இதைக் கண்டு தடுக்க வந்த வெங்கட்ராமனின் மகன் கார்த்திக் (47) என்பவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கத்தியால் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயமடைந்த தந்தை மகன் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து வெங்கட் ராமன் மணவாள நகர் போலீசில் புகார் செய்தார்.

    மணவாளநகர் போலீசார் இதுகுறித்து ரகு, சண்முகம் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடனுக்கு மது பாட்டில் கொடுக்க மறுத்த பார் கேஷியரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்  பாளையம் மரியாள்நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது62). இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் மதுக்கடையில் இருந்த போது அவரிடம் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடனுக்கு மதுபாட்டில் கேட்டார். ஆனால் ராஜா கொடுக்க மறுத்து விட்டார். 

    இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவின் முகத்தில் குத்தினார்.

    இதில் வலது கண் புருவத்தில் படுகாயமடைந்து ரத்தம் கொட்டியதால் ராஜா அலறல் சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சந்திரசேகர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் காயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை தேடி வருகிறார்கள்.
    ×