search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed worker"

    வில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலிதொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் வடக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது46), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவரது சித்தி மகள் ஜெயந்தி (40) இவர் புதுவையை அடுத்த வில்லியனூர் காவேரி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஆரியப்பாளையத்தில் உள்ளது. ஏழுமலை அடிக்கடி ஜெயந்தி வீட்டுக்கு வருவது வழக்கம்.

    அப்போது அவர் தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொடுத்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி வீட்டுக்கு ஏழுமலை வந்தார். நேற்று மாலை அவர் ஆரியப்பாளையத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகரில் பழிக்குப்பழியாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாத்து நாயக்கன்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேசுவரன் (வயது 47), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் அங்கு வேகமாக வந்தன.

    அதில் வந்த 4 பேர், சங்கரேசுவரனை சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார்.

    இருப்பினும் அந்த கும்பல் சங்கரேசுவரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த சங்கரேசுவரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த கொலை சம்பவம் விருதுநகர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. சங்கரேசுவரனின் சகோதரர் சுடலைமாடசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    விருதுநகர் அல்லம் பட்டியைச் சேர்ந்த முத்து காமாட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சங்கரேசுவரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தான் முத்துகாமாட்சியின் சகோதரர்கள் பழிக்குப்பழியாக அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக முத்து காமாட்சியின் சகோதரர்கள், ஐ.சி.ஏ. காலனியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், சேர்மராஜ், அல்லம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் குமார், மாத்துநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கீர்த்தி சுவரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

    மின்சாரம் இல்லாததால் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிய தொழிலாளி மீது மணல் லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி பலியானார்.
    போரூர்:

    வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்.நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சண்முகம் (வயது 57). லாரியில் மணல் இறக்கும் வேலை செய்து வந்தார். சண்முகம் நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி மணல் இறக்குவதற்காக பின்னால் வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு தூங்கி கொண்டிருந்த சண்முகம் மீது ஏறி இறங்கியது. 

    இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய லாரி டிரைவர் சேட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×