என் மலர்
நீங்கள் தேடியது "Kerala government bus"
- கேரளாவில் இருந்த வந்த அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- போலீசார் சரவணனை மீட்டு நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன். மெக்கானிக். இவரது நண்பர் கலங்கரையை சேர்ந்த சரவணன் ( வயது 25). தனியார் நிறுவன ஊழியர். நண்பர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கி ளில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
செங்கோட்டையில் உள்ள கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே கேரளாவில் இருந்த வந்த அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சரவணன் பலத்த காயங்களுடன் உயிரிருக்கு போராடி கொண்டிருந்தார்.இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கோட்டை போலீசார் சரவணனை மீட்டு நெல்லை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அவரை காரில் செல்ல விடாமல் அவமதிப்பு செய்தார். மேலும் ஊர் திரும்பும் போதும் மத்திய மந்திரியின் காரை மறித்து போலீசார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.க.வினர் அதிருப்தியடைந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கேரள போலீசை கண்டித்து பா.ஜ.க.வினர் தேனி மாவட்டம் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக கம்பத்துக்கு வந்த கேரள அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்ததால் பதட்டம் ஏற்பட்டது. மேலும் கேரள போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். சம்பவம் குறித்து அறிந்ததும் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் செய்தவர்களை கலைந்து போக எச்சரித்தனர்.
மேலும் இது தொடர்பாக கூடலூர் நகர பா.ஜனதா தலைவர் ஜெயக்குமார் நிர்வாகிகள் விஜயகுமார், பாண்டியன், ஜெயராம் முருகன், ரமேஷ்குமார், ராஜா, பெரியமருது ஆகியோரை கைது செய்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Sabarimala #BJP






