என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka By elections"
- சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சென்னபட்டணாவில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், மத்திய மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி யோகேஷ்வர், சிக்காவியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமதுகான் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் துகாராம் எம்.பி.யின் மனைவி அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க. சார்பில் பங்காரு ஹனுமந்து ஆகியோர் உள்பட 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
3 தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார். #KarnatakaBypolls #Shimoga






