search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanomozhi MP"

    • கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீர் வடகால் பாசன பகுதியில் அமைந்துள்ள முக்கிய குளமாக கோரம் பள்ளம் குளம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவை குண்டம் வடகால் கடைசி யில் இக்குளம் அமைந்து உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1,300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888-ம் வருடம் ஆங்கி லேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.

    இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் வித மாகவும், உபரி நீரை வெளி யேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ள னர்.

    பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967-ல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது .

    கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம் பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையா புரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் வேளாண் தொழில் நடை பெற்று வருகிறது. இப்பகுதி களில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர் வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சாதனைகளை இன்று பேசுகின்ற நிலையில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கோரம் பள்ளம் குளம் தூர்வாரப்படு வதற்கான பணிகள் ரூ.12 கோடியில் தொடங்கப்பட் டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 228 மில்லியன் லிட்டர் கன அளவு கொள்ள ளவு இருக்க கூடிய குளத்தில் 2600 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக பணிகள் நிறை வேற்றப்படும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி யூனியன் துணை சேர்மன் ஆஸ்கர், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன செயற் பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், பாஸ்டி னோவினோ, தூத்துக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, முத்தையா புரம் முள்ளக்காடு அத்தி மரப்பட்டி விவசாய சங்க தலைவர் பூபதி செயலாளர் ரகுபதி என்ற சின்ன ராஜ், பொருளாளர் கந்தசாமி, கோரம்பள்ளம் விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் ஜோதி மணி, அழகுராஜா, இளங்கோவன், தானியேல் மாநகராட்சி கவுன்சிலர் ராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் ஜெகன், கூட்டுடன்காடு ஊராட்சி ஹரி பாலகிருஷ்ணன், அத்திமரப்பட்டி வசந்தி, பால்பாண்டியன், பொன்ராஜ் மற்றும் நிர்வாகி கள், அதிகாரிகள், விவசாயி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காயல்பட்டினத்தில் பிரதம மந்தரி ஜன்விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ் பொது சேவை மைய கட்டிட பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
    • மகளிர் சொந்தக்காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் பெண் விடுதலையை அடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் பிரதம மந்தரி ஜன்விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ் பொது சேவை மைய கட்டிட பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.ரூ.1.40 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவு பெற்ற நிலையில் அதன் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.இதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்ராமலிங்கம் வரவேற்று பேசினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்ட சில மாதங்களிலேயே சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பொது சேவை மையக்கட்டிடத்தில் கம்ப்யூட்டர் அக்கவுண்டிங், ஆரிஓர்க், எம்ப்ராயிடிங் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். ஆரி வேலைப்பாடு தொழிலில் உலக அளவில் இந்தியா முக்கியப்பங்கு வகிக்கிறது. இதேபோல் காளான் வளர்ப்பிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெண்கள் அனைவரும் இங்கு பயிற்சிகளை பெற்று சுய தொழிலில் சிறந்து விளங்க முடியும். மகளிர் சொந்தக்காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் பெண் விடுதலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பெண் களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை கனிமொழி எம்.பி மற்றும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டனர்.

    திறப்பு விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தாக்ரே சுபஞான தேவ்ராவ், திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் குமார்சிங், தமிழ்நாடு கிராம வங்கி வட்டார மேலாளர் ரமேஷ்வாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை இயக்குநர் விக்னேஷ்வரன், ஏ.ஓ.எஸ் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபுத்திரன், பிரதம மந்திரி ஜன்விகாஷ் மாவட்ட திட்ட ஒப்புதல் உறுப்பினர் சித்தி ரம்ஜான், நகராட்சி துணைத் தலைவர் சுல்தான்லெப்பை, நகராட்சி வார்டு கவுன்சிலர் சுகு என்ற ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.
    • தமிழர்கள் ஒன்றாக இணைந்து பாடுபடும் போது தமிழ்நாட்டுக்கே நன்மை தரக்கூடியதாக அமையும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.

    1,000 பேர் இணைந்தனர்

    வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாற்று கட்சியினர் சுமார் 1,000 பேர் கடம்பூரை சேர்ந்த எஸ்.வி.பி.எஸ். நாகராஜா தலைமையில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து கனிமொழி எம்.பி. பேசினார். அவர் கூறியதாவது:-

    நல்லாட்சி

    கடந்த 1½ ஆண்டுகளாக தமிழகத்தை இந்திய நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு நல்லாட்சியை முதல்-அமைச்சர் நடத்தி வருகிறார்.மத்திய அரசை தைரியாமக எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு கம்பீரமான ஆட்சியை, தி.மு.க.ஆட்சியை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. அரசியல் கட்சி மட்டும் அல்ல. சமூக இயக்கம் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். நம்முடைய குழந்தைகள் படிக்க வேண்டும், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், சுய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைக்க கூடிய இயக்கம் தி.மு.க.

    ஆகையால் தமிழ்நாட்டில் முன்னேற்றம், சமூக நீதி வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றக்கூடிய இந்த தி.மு.க.வுடன் உங்களை இணைத்து உள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அத்தனை பேரும் இணைந்து பணியாற்றுவோம்.

    தமிழர்கள் ஒன்றாக இணைந்து பாடுபடும் போது தமிழ்நாட்டுக்கே நன்மை தரக்கூடியதாக அமையும். அது நமக்கு பலன் தரக்கூடிய ஒன்றாக நிச்சயமாக இருக்கும். தி.மு.க. மூத்த முன்னோடிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் இந்த இயக்கத்துக்கு செய்த உள்ள தியாகங்கள், உழைப்பு அத்தனையும் உணர்ந்து அவர்களோடு இணைந்து நீங்கள் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, கோவில்பட்டி நகர செயலாளர் கரு–ணா–நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×