search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சொந்த காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால் தான் பெண் விடுதலையை அடைய முடியும் -  கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    விழாவில் பெண்களின் கைவினைப் பொருட்களை கனிமொழி எம்.பி., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு பாராட்டிய போது எடுத்த படம். அருகில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளார்.

    மகளிர் சொந்த காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால் தான் பெண் விடுதலையை அடைய முடியும் - கனிமொழி எம்.பி. பேச்சு

    • காயல்பட்டினத்தில் பிரதம மந்தரி ஜன்விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ் பொது சேவை மைய கட்டிட பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
    • மகளிர் சொந்தக்காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் பெண் விடுதலையை அடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் பிரதம மந்தரி ஜன்விகாஷ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ் பொது சேவை மைய கட்டிட பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.ரூ.1.40 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவு பெற்ற நிலையில் அதன் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.இதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்ராமலிங்கம் வரவேற்று பேசினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இக்கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்ட சில மாதங்களிலேயே சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பொது சேவை மையக்கட்டிடத்தில் கம்ப்யூட்டர் அக்கவுண்டிங், ஆரிஓர்க், எம்ப்ராயிடிங் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். ஆரி வேலைப்பாடு தொழிலில் உலக அளவில் இந்தியா முக்கியப்பங்கு வகிக்கிறது. இதேபோல் காளான் வளர்ப்பிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெண்கள் அனைவரும் இங்கு பயிற்சிகளை பெற்று சுய தொழிலில் சிறந்து விளங்க முடியும். மகளிர் சொந்தக்காலில் நின்று சமூக பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் பெண் விடுதலையை அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பெண் களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை கனிமொழி எம்.பி மற்றும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டனர்.

    திறப்பு விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தாக்ரே சுபஞான தேவ்ராவ், திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் குமார்சிங், தமிழ்நாடு கிராம வங்கி வட்டார மேலாளர் ரமேஷ்வாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை இயக்குநர் விக்னேஷ்வரன், ஏ.ஓ.எஸ் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் வீரபுத்திரன், பிரதம மந்திரி ஜன்விகாஷ் மாவட்ட திட்ட ஒப்புதல் உறுப்பினர் சித்தி ரம்ஜான், நகராட்சி துணைத் தலைவர் சுல்தான்லெப்பை, நகராட்சி வார்டு கவுன்சிலர் சுகு என்ற ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×