search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korampallam Pond"

    • கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீர் வடகால் பாசன பகுதியில் அமைந்துள்ள முக்கிய குளமாக கோரம் பள்ளம் குளம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவை குண்டம் வடகால் கடைசி யில் இக்குளம் அமைந்து உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1,300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888-ம் வருடம் ஆங்கி லேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.

    இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் வித மாகவும், உபரி நீரை வெளி யேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ஒன்றையும் அந்நேரத்தில் ஆங்கிலேயர்கள் கட்டியுள்ள னர்.

    பின்னர் காலப்போக்கில் மதகுகள் சேதமடைந்ததால், 1967-ல் இரண்டு மதகுகளை ஒன்றாக்கி 24 பெரிய மதகுகளாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு உள்ளது .

    கோரம்பள்ளம் குளத்து பாசனத்தை நம்பி கோரம் பள்ளம், பெரியநாயகிபுரம், அத்திமரப்பட்டி, முத்தையா புரம், வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, சிறுப்பாடு முதலான கிராம பகுதிகளில் வேளாண் தொழில் நடை பெற்று வருகிறது. இப்பகுதி களில் பெரும்பாலும் நெல், வாழைப் பயிர்களே அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கோரம்பள்ளம் குளத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தூர் வாரும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கொடி அசைத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சாதனைகளை இன்று பேசுகின்ற நிலையில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான கோரம் பள்ளம் குளம் தூர்வாரப்படு வதற்கான பணிகள் ரூ.12 கோடியில் தொடங்கப்பட் டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 228 மில்லியன் லிட்டர் கன அளவு கொள்ள ளவு இருக்க கூடிய குளத்தில் 2600 ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக பணிகள் நிறை வேற்றப்படும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. வர்த்தக அணி துணை செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி யூனியன் துணை சேர்மன் ஆஸ்கர், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன செயற் பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், பாஸ்டி னோவினோ, தூத்துக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, முத்தையா புரம் முள்ளக்காடு அத்தி மரப்பட்டி விவசாய சங்க தலைவர் பூபதி செயலாளர் ரகுபதி என்ற சின்ன ராஜ், பொருளாளர் கந்தசாமி, கோரம்பள்ளம் விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், விவசாய சங்க நிர்வாகிகள் ஜோதி மணி, அழகுராஜா, இளங்கோவன், தானியேல் மாநகராட்சி கவுன்சிலர் ராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் ஜெகன், கூட்டுடன்காடு ஊராட்சி ஹரி பாலகிருஷ்ணன், அத்திமரப்பட்டி வசந்தி, பால்பாண்டியன், பொன்ராஜ் மற்றும் நிர்வாகி கள், அதிகாரிகள், விவசாயி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×