search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO Chairman"

    மீனவர்களுக்கான புதிய செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து மேலும் மேம்படுத்த முயற்சி செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #ISROChairman
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இது 3-வது தொலைதொடர்பு செயற்கைகோள். நவீன தொழில்நுட்பத்துடன் 6 மாதம் கூடுதலாக இயங்கக்கூடியது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம்.



    மீனவர்களுக்கான செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து அதை இன்னும் மேம்படுத்த முயற்சி செய்வோம். மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman

    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    ×