இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்..

சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்..
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் (84) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது இன்று அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர்.

2003 முதல் 2009 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது சேவைக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com