search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intermediate teachers"

    கடந்த 6 நாள்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று இரவு வாபஸ் பெறப்பட்டது. #TeachersProtest
    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவதை கண்டித்து சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஊதிய முரண்பாடை களைய வேண்டும் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற கோ‌ஷத்தை முன் வைத்து போராடி வருகிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக கடந்த 24-ந்தேதி ஆசிரியர்- ஆசிரியைகள் குவிந்து இருந்தனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இங்கு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்டேடியத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

    இதுவரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. 

    கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உறுதியளித்தார்.

    பிரதீப் யாதவின் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். #TeachersProtest
    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்துள்ளது. #TeacherProtest
    சென்னை:

    அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னதாக பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருந்து வருவதே இந்த போராட்டத்திற்கு காரணம்.

    ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந்தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

    சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியைகள், கைக் குழந்தைகள் மற்றும் தங்கள் கணவர்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    கொட்டும் பனியையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 5-வது நாளாக இரவு- பகலாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் பலர் உடல் நிலையில் சோர்வுற்றனர். ஆரம்பத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து வந்ததால் 100-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.


    இப்போது தண்ணீர் மட்டும் குடித்து கொண்டே உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் சம்பவ இடத்தில் போலீசாரும், மருத்துவ குழுவினரும் குவிக்கப்பட்டனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சோர்வுற்று மயங்கினர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். நேற்று இரவு வரை 180 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலும் ‘ட்ரிப்ஸ்’ ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் 5 பேர் இன்று காலையில் மயக்கம் அடைந்தனர். அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் சதாசிவம், ஆசிரியைகள் தமிழ்செல்வி, பூமணி, கிருஷ்ணவேணி, முத்துமாரி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து அங்கேயே குளுக்கோஸ் ஏற்றினர். போராட்ட களத்தில் முதல் உதவி அளிக்கும் வகையில் குளுக்கோஸ் ஏற்றவும் அதனை தொங்கவிடவும் தேவையான இரும்பு ஸ்டேண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாக்கெட்டினை சக ஆசிரியர்கள் கையில் பிடித்து கொண்டனர். ஒரு சிலரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் குழு அறிவுறுத்தியதால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

    கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்து விட்டு அவர்கள் பட்டினியாய் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    கொசுக்கடியிலும், குளிரிலும் குழந்தைளுடன் உண்ணாவிரதத்தில் இருந்து வரும் ஆசிரியைகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. பந்தலோ, பாயோ எதுவும் இல்லாமல் தரையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.


    போராட்டத்தில் அதிகளவு பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அளவு கழிவறை வசதி கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கூறியதாவது:-

    ஒரே தகுதியுடைய ஒரே வேலை செய்யக் கூடிய ஆசிரியர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம் வழங்குவதை எதிர்த்துதான் போராடுகிறோம். இந்த ஊதிய வித்தியாசம் ரூ.15 ஆயிரம்வரை உள்ளது. சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில்தான் போராடுகிறோம்.

    நியாயமான எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

    கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். பள்ளி விடுமுறை முடிந்தாலும் கூட போராட்டம் தொடரும் என்றார்.

    இதற்கிடையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் அரசு வழங்குவதால் அதனை சித்தரிக்கும் வகையில் டி.பி.ஐ, வளாகத்தில் துப்புரவு பணியினை மேற்கொண்டனர். #Teachersprotest
    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்துள்ளது. #TeacherProtest
    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 24-ந்தேதி முதல் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

    முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீசார் வேனில் ஏற்றி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

    விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதன் பிறகு பிற்பகலில் அரசு அதிகாரிகள் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனால் 4-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதில் 123 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் ஆசிரியர்கள் சாப்பிடாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக டி.பி.ஐ. வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்காக தயார் நிலையில் ஆம் புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #Teachersprotest
    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 36 பேர் மயக்கமடைந்தனர். #TeacherProtest
    சென்னை:

    தமிழக அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.



    அங்கு அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். நேற்று 30 ஆசிரியர்கள் அடுத்தத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    நேற்று இரவு முதல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் இன்று மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தனர். மொத்தம் 36 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவார்கள்.

    தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #TeacherProtest
    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருச்சி:

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதால் தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முடிவுறு பணித்தொகுதியாக அறிவித்து, அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் அதே பணியிடத்திலேயே 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    ×