என் மலர்
நீங்கள் தேடியது "Indian airspace"
- பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
- பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி கிடைக்காது. இந்தத் தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்று இந்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று பிற்பகல் பாகிஸ்தான் நாட்டின் வான் எல்லை வழியாக பறந்துவந்த அந்நாட்டின் ஹெலிகாப்டர் குல்பூர் செக்டர் அருகே இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சிறிது நேரம் வட்டமிட்டு பறந்தது.
இந்த காட்சியை எல்லையில் உள்ள இந்திய வீரர்கள் வீடியோவாக பதிவு செய்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய அந்த வெள்ளை நிற ஹெலிகாப்டர் அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமானதா?, அல்லது தனியார் ஹெலிகாப்டரா? என்ற முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Pakistanihelicopter #Indianairspaceviolated






