search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Certificate"

    • 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரியில் சேர்ந்திடும் பொருட்டு, இணையதளத்தின் வாயிலாக, சாதிச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த வானூர் வட்டம், தென்கொடி ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சாருமதி மற்றும் சரண்யா ஆகியோ ருக்கு மாவட்டகலெக்டர் பழனி பழங்குடியி னருக்கான இருளர் சாதிச் சான்றித ழ்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 10,515 சாதிச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 11,428 வருமானச் சான்றி தழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 9,714 நபர்களுக்கு வருமானச்சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 9,795 இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,685 நபர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விண்ணப்ப தாரரின் மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது. அதனடிப்படையில், வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த வீரப்பன் மகள்களான சாருமதி மற்றும் சரண்யா கல்லூரி மேற்படிப்பிற்காக சாதிச்சான்றிதழ் வேண்டி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்ப ங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு இரு மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான இருளர் சாதிச் சான்றி தழ்கள் வழங்கப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்பர மேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர்ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy #AIADMK
    சென்னை:

    வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவை ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்’ வாயிலாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 சந்தாதாரர்களுக்கு ‘எச்.டி செட்டாப் பாக்ஸ்களை’ வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ‘எச்.டி.’ டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தொடங்கி வைத்தார்.

    தற்போது ‘எஸ்.டி செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ‘எச்.டி’ ஒளிபரப்பு சேவை உயர்சந்தை தேவையை பூர்த்தி செய்வதால், இச்சேவையை விரும்பும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ குறைந்த விலையான ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள எச்.டி. ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 ‘எஸ்.டி.’ சேனல்களுடன், 45 ‘எச்.டி.’ சேனல்களும் சேர்த்து மொத்தம் 425 சேனல்கள் ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து மாத கட்டணத்தில் வசூலிக்கப்படும்.

    இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்த செயலி வழங்கும்.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.

    பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalanisamy #AIADMK
    ×