என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital fire"

    • ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது.
    • சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    வியன்னா:

    ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். சுமார் 90 நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலியானவர்களில் ஒருவரான 75 வயது நோயாளி படுக்கையில் சிகரெட் புகைத்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவ மனையாக இருந்து வருகிறது.
    • மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சேலம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கும் தலைமை மருத்துவ மனையாக இருந்து வருகிறது. நாள்தோறும் சுமார் 2000 -க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

    கலெக்டர் ஆய்வு

    இதை அறிந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு பல்வேறு இடங்களை ஆய்வு ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    இன்று காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக புகை பரவியது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக புகை பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.

    இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். மின் கசிவு ஏற்பட்ட வார்டில் இருந்த 65 நோயாளிகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பினால் நோயாளி களுக்கோ அல்லது மருத்துவ உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் புதிய நோயாளிகள் வருகைதரும்போது அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது பொதுப் பணித்துறையின் மின் பிரிவு அலுவலர்கள் எவ்வாறு மின் கசிவு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவ மனையின் முதல்வர், இணை இயக்குநர் நலப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டோர் மின் கசிவு ஏற்பட்ட வார்டில் மீண்டும் இயல்பான மருத்துவச் சேவை தொடங்கி நடைபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் மணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    அரசு ஆஸ்பத்திரி தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவத்தில் பெண் டாக்டர், 3 செவிலியர்களை மராட்டிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    மும்பை :

    மராட்டிய மாநிலம் அகமதுநகரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் 65 முதல் 83 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 7 நபர் கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி நடத்திய விசாரணையில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில் டாக்டர்கள் சுனில் போகர்னா, சுரேஷ் தக்னே, விஷாகா ஷிண்டே, செவிலியர் சப்னா பதாரே ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செவிலியர்கள் அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பெண் டாக்டரான விஷாகா ஷிண்டே மற்றும் செவிலியர்களான சப்னா பதாரே, அஸ்மா சேக், சன்னா ஆனந்த் ஆகியோரை அகமது நகர் கிராமப்புற போலீசார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல், கவனகுறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது குறித்து அகமது நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் பாட்டீல் கூறியதாவது:-

    சம்பவம் நடந்தபோது டாக்டர் விஷாகா ஷிண்டே பணியில் இருந்தார். ஆனால் சம்பவம் குறித்து அவர் அறிக்கை அளிக்க தவறிவிட்டார். கைதான 3 செவிலியர்களும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு வெளியே இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நோயாளிகளை காப்பாற்ற வார்டுக்குள் சென்று உறவினர்கள் போராடிய போது, இந்த செவிலியர்கள் வெளியே தான் நின்று உள்ளனர். இதனால் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டரும், செவிலியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×