search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High power towers"

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது
    • பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து தற்போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர்.
    • கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகரா ட்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வந்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர். அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் மாவட்டச் செயலாளர் சிவபத்ம நாதன் கூறியதாவது:-

    கடையநல்லூர் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் பணிகள்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட நகர்மன்ற தி.மு.க. உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.

    தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.8 லட்சம் வீதம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்குதல் மற்றும் நகராட்சி பகுதியில் தலா ரூ.4.,20 லட்சம் வீதம் 8 இடங்களில் ரூ.68.6 லட்சம் வீதம் உயர் மின் கோபுரம் என மொத்தம் ரூ.81.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தெரிவித்தார்.

    இதற்கான இடங்களை தேர்வு செய்ய நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பொறியாளர் லதாவிடம் கேட்டுக்கொண்டார். அப்பொழுது உதவி இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் ,நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், கண்ணன், முகமது அலி, 17-வது வார்டு செயலாளர் பெருமாள்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் இன்று 10-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருகே உள்ள தென்அரசம்பட்டு கிராமத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும், அரை நிர்வாணம் என பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 5 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கீழ்பென்னாத்தூர் அருகே கந்தபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன், குண்ணமுறிஞ்சையை சேர்ந்த சதீஷ்குமார், பன்னீர்செல்வம், வீரளூர் ஏகாம்பரம், வட மாதிமங்கலம் சண்முகம் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

    கடந்த 23-ந்தேதி முதல் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று 3-வது நாளாக இவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரில் ஏகாம்பரத்திற்கும், சதீஷ்குமாருக்கும் திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 3 பேரும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 10-வது நாளாகவும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×