search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanushkumar MP"

    • நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர்.
    • கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகரா ட்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வந்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர். அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் மாவட்டச் செயலாளர் சிவபத்ம நாதன் கூறியதாவது:-

    கடையநல்லூர் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் பணிகள்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட நகர்மன்ற தி.மு.க. உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.

    தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.8 லட்சம் வீதம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்குதல் மற்றும் நகராட்சி பகுதியில் தலா ரூ.4.,20 லட்சம் வீதம் 8 இடங்களில் ரூ.68.6 லட்சம் வீதம் உயர் மின் கோபுரம் என மொத்தம் ரூ.81.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தெரிவித்தார்.

    இதற்கான இடங்களை தேர்வு செய்ய நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பொறியாளர் லதாவிடம் கேட்டுக்கொண்டார். அப்பொழுது உதவி இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் ,நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், கண்ணன், முகமது அலி, 17-வது வார்டு செயலாளர் பெருமாள்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×