search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Garudar"

  • சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
  • திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

  ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் வழிபாடு மூலம் நமக்கு உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

  கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.

  கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்ப வர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகா மோதர், மல்லீபுஷ்ய பிரியர். மங்களாலயர், சோமகார், பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகரு டன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக் கொழுந்து, கதிர்ப்பச்சை. சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

  குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டு மென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க் கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்ப வர்களும் கருடாழ்வாரை புதன் கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

  வீட்டில் பணப் பிரச்சினை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் சிறு துரும்பாக மாறும்.

  • வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.
  • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

  1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும.

  2. ஹயக்ரீவர் குதிரை முகம் ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

  3. நரசிம்மம் சிங்கமுகம் சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

  4. வராகர் முகம் சகல தரித்திரமும் நீங்கி மங்களகரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

  5. கருடன் முகம் சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் சகல விதமான தோஷங்களம் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களம் நீங்கும்.

  என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம் மனோபலம் புத்திபலம் தேகபலம் பிராணபலம் சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாட்சம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

  அனுமன் மகாபலிஷ்டன் அஞ்சனாகுமாரன் ராமேஷ்டன் வாயுபுத்திரன். அர்ஜுன சகன் அமிதபாராக்ரமன மாருதி சுந்தரன பிங்காட்சன ஆஞ்சநேயன மாருதிராயன சஞ்சீவராயன் பஜ்ரங்பலி ஸ்ரீராமதாசன அனுமந்தையா ஆஞ்சநேயலு மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு.

  ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

  • சிவன் தன் நெற்றிக்கண்ணையே கொடுத்தார்.
  • எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர்.

  இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர்.

  அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.

  ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். ரக்த பிந்து ரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.

  மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரிய மாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

  அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா, ஸ்ரீநரசிம்மா, ஸ்ரீவராஹர், ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான்.

  அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.

  1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம், சாம வேதம் இவற்றை பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.

  2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடம் இருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்கு சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடம் இருந்து மீட்பதற்கு உதவினார்.

  3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.

  4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும், வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலை கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.

  இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம்.

  ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.

  ×