search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja Case"

    • அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மாணிக்கம்(வயது 25). இவர் தற்போது நேதாஜி நகரில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்று வருவதாக இவர் மீது புகார்கள் வந்தது.

    இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். இவர் மீது ஆலங்குளம் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    • போலீசார் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
    • வாலிபர் ஒருவர் போலீசாரைக்கண்டவுடன் தப்பியோட முயன்றார்.

     பல்லடம்

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு அருகே போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரைக்கண்டவுடன் தப்பியோட முயன்றார்.இதையடுத்து அவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரது நண்பர்களுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அடுத்தடுத்த பகுதிகளில் இருந்த அவரது நண்பர்கள் 3 பேரையும் வளைத்துப் பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர்கள் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பருன்ராவ்(வயது 24) கௌதம்(27), சஞ்சய்குமார்(19), அபிஷேக் குமார்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சா, அவற்றை விற்பனை செய்ய பயன்படுத்திய 3 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    ×