என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "faints"

    • அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.
    • விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    அதன்படி, கேரளா மாநிலம் கண்ணூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    அப்போது, அம்மாநில தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் மேடையில் உரையாற்றினார். அமைச்சர் பேசிக்கொண்டு இருந்தபோதே அவர் திடீரென மயங்கினார்.

    சுதாரித்துக்கொண்ட அருகில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், மயங்கிய அமைச்சரை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டனர்.

    அமைச்சருக்கு சுயநினைவு வராததை அடுத்து, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். #NitinGadkari
    அகமத்நகர்:

    மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இன்று மகாத்மா புலே வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரி  தனது பேச்சை முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இருக்கையில் இருந்து எழுந்த கட்காரி, திடீரென மயங்கி சரிந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார்.



    பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கட்காரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி திடீரென மயங்கி விழுந்ததால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #NitinGadkari

    ×