என் மலர்
நீங்கள் தேடியது "Engineers Day"
- இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை முன்னெடுத்து, துறைகளில் கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து என்ஜினீயர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.
- பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
வள்ளியூர்:
சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில்தேசிய பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.
பொறியாளர் தின சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஜெயா என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிஆனந்த் கலந்துகொண்டார்.
பொறியாளர் தினத்தில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. தொழில்நுட்ப தாள் மற்றும் விளக்கக்காட்சி போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக விவி பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் சைமன் கிறிஸ்டோபர், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்தனர்.
போட்டியில் முதலாமாண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பயிலும் சுந்தர விக்னேஸ்வரன் மற்றும் தருண் அந்தோணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர்கள் மகேஸ்வரன் மற்றும் ஆகாஷ் 2-ம் பரிசும் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் பிரதீப் ராஜா 3-ம் பரிசும் பெற்றனர்.
வினாடி-வினா போட்டியில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவு மாணவர் தீபக் ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஜேம்ஸ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர் ஜெபம் மற்றும் சாமுவேல் 2-ம் பரிசும், 3-ம்ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் மரியசூசை ரோகன் மற்றும் குட்டி சாமுவேல் ஆகியோர் 3-ம் பரிசும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியை கல்லூரியின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி தனது பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைத் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி:
செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பொறியாளர் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேசிய என்ஜினீயர் தின விழா கொண்டாடப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் சிறப்பான உலகிற்கு சிறந்த பொறியாளர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு சிவில் பொறியியல் பிரிவு தலைவர் பழனிவேல் வரவேற்றார். பேராசிரியர் சரவணன் நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புதுவை அரசு சுற்றுச் சூழல் துறை சீனியர் பொறியாளர் ரமேஷ் கலந்து கொண்டு "சமூக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
ரமேஷ்சுக்கு பல்கலைக்கழகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் பொறியாளர் குமார் நன்றி கூறினார்.






