search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees death"

    சேலம் அருகே அடுத்தடுத்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்காரப்பட்டி அருகே உள்ள மலங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது 55). தறி தொழிலாளி. இன்று காலை சேலம்-சங்ககிரி சாலை மெயின்ரோட்டில் உள்ள மூங்கில் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மகன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். பழனியப்பனுக்கு பழனியம்மாள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    சேலம் காகாபாளையம் அருகே உள்ள கனககிரி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்(63). கூலி தொழிலாளி. நேற்று மாலை சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் தங்கராஜ்(35) கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் அருகே பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வி‌ஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் சிச்ருகானபள்ளியில் பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் கழிவுநீரை சுத்திகரிக்க மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டேங்க் ஒன்றை அமைத்து பேட்டரி தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன கழிவுநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனை ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் அகற்றி சுத்தப்படுத்துவது வழக்கம்.

    நேற்று இரவு பாகலூர் அருகே உள்ள கொத்தபள்ளியை சேர்ந்த நாகேஷ் (வயது 25) என்பவர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று பராமரிப்பு பணியை செய்தார்.

    அப்போது அங்கு இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தார். உடனே அதில் இருந்து வி‌ஷவாயு கசிந்ததால் நாகேஷ் மயங்கி அங்கேயே கீழே விழுந்தார். இதனை கண்ட பாகலூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் நாகேஷின் உடல் அருகே ஓடிவந்தார். அப்போது மஞ்சுநாத்தும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் 2 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஓசூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பான முறையில் மூடிவிட்டு நாகேஷ், மஞ்சுநாத் உடலை மீட்டனர்.

    நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் வி‌ஷவாயு தாங்கி இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தெரியவந்ததும் உடனே கம்பெனியில் திரண்டனர். அப்போது போலீசார் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    உடனே உறவினர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க மறுத்து போலீசாரை முற்றுகையிட்டனர். இறந்தவர்களின் 2 பேரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடல்களை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. உடனே அங்கு விரைந்து வந்த ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி, தாசில்தார் முத்துபாண்டி உள்பட அதிகாரிகள் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் இன்று சுத்தம் செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒரு பெண் உள்பட 5 துப்புரவு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்துக்கு உட்பட்ட டுர்கி  கிராமத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு பெண் தொழிலாளி இன்று இறங்கினார். தொட்டியில்  இருந்து வெளியான நச்சுவாயுவினால் மூச்சுத்திணறிய அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அடுத்தடுத்து 5 தொழிலாளிகள் அவரை மீட்பதற்காக உள்ளே இறங்கினர்.

    அவர்கள் 5 பேரும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமெண்ட் காரையை உடைத்து அவர்கள் 6 பேரையும் வெளியே மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒரு பெண் உள்பட 5 பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    ×