search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Member Murder"

    • வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம்.
    • தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகநாதபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களாக 77-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார்.

    திருமுருகன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வந்தார். எப்போதும் 4 முதல் 5 பேருடன் வெளியில் சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றுவிட்டு திரும்பினர்.

    இதற்கிடையே அந்த பகுதிக்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத திருமுருகன் அவர்களின் பிடியில் இருந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்போது அங்கு திருமுருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 பேரை பிடித்துள்ளனர். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தி.மு.க. வட்டச் செயலாளர் நள்ளிரவில் 5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார்.
    • அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர். அவரது மனைவி சரஸ்வதி. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்.

    தினசரி அதிகாலை நேரத்தில் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு வருவதுண்டு. அதன்படி இன்று காலை மோட்டார் சைக்கிளில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இரும்பை மகாலீசுவரர் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர்.

    அந்த கும்பல் கையில் கத்தி மற்றும் அரிவாள் வைத்திருந்தனர். அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஏரிகரைக்கு ஓடினார்.

    உஷாரான அந்த கும்பல் ஜெயக்குமாரை விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    ஏரிக்கரையில் ஜெயக்குமார் பிணமாக கிடப்பதை அந்த பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தார். இந்த செய்தி கோட்டக்கரை கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. சிறிது நேரத்தில் கிராம மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மோப்பநாய் சிருஷ்டி வரவழைக்கப்பட்டது. அது மகாலீசுவரர் கோவிலை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அந்த பகுதியில் செல்வாக்கானவர். இதனால் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரை கொலை செய்த மர்ம கும்பல் எதற்காக கொலை செய்தனர். அரசியல் முன்விரோதத்தால் புதுவை கூலிப்படையை ஏவி கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×