என் மலர்

  நீங்கள் தேடியது "DMDK Administrators"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல்.
  • தூத்துக்குடி பாலவிநாயகர் கோவிலில், பெரிய ஜாமிய பள்ளிவாசல், பெரிய பனிமயமாதா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம்பெற்று பழைய கம்பீரத்துடன் வர தூத்துக்குடியில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகே பாலவிநாயகர் கோவிலில் சிறப்பு பால அபிஷேகம் பூஜையும், பெரிய ஜாமிய பள்ளிவாசலில்சிறப்பு தூஆவும், பிரசித்திபெற்ற தூத்துக்குடி பெரிய பனிமயமாதா

  கோவிலில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பொறு ப்பாளர் தயாளலிங்கம், பொருளாளர் விஜயன், துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் , மகளிரணி மாலதி, பகுதி நிர்வாகிகள்

  வட்ட செயலாளர்கள் வல்லரசுதுரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
  சென்னை:

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் 17-வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

  மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
  ×