search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Device"

    • பள்ளி மாணவன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான்.
    • சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொறியியல் பிரிவு சார்பில் உலக இளைஞர் திறன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழில் கல்வி பயிற்றுனர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் முகமது ரபிக் கலந்து கொண்டு பேசுகையில்:-

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி உலக இளைஞர் திறன் தினத்தை அறிவித்தது. இந்த நாள் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனை வருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" என்று பரிந்துரைக்கிறது.

    ஐ.நா.வை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்கள் மற்றும் பெரியவர்க ளிடையே வளர்க்க உதவுவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

    பின், பள்ளி மாணவன் தவச்செல்வன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான். மாணவன் லோகேஸ்வரன் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்து பேசினார். முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் ஆசிரியை அஜிதா கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளம் மற்றும் நெருப்பு போன்றவற்றால் பேரிடர் ஏற்படும் போது முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியினை வழங்கினர்.
    • வெள்ளத்திலிருந்து மீட்க பயன்படுத்தும் சாதனங்களை காட்சிப்படுத்தி அவற்றினை கையாளும் முறைகள் பற்றி விவரித்தார்.

    திருவையாறு:

    திருவையாறு தாலுகா ஆபீசில் பேரிடர் முதல்நிலைப் பணியாளர்களுக்கு பேரிடர் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்த முகாமில் திருவையாறு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு வெள்ளம் மற்றும் நெருப்பு போன்றவற்றால் பேரிடர் ஏற்படும்போது முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியினை வழங்கினர்.

    மேலும், தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் வெள்ளத்திலிருந்து மீட்கப் பயன்படுத்தும் சாதனங்களைக் காட்சிப்படுத்தி, அவற்றினைக் கையாளும் முறைகள் பற்றி விவரித்தனர்.

    முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் அகத்தியன், முதல்நிலைப் பணியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும்.
    • டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர்பாதுகாப்பு மையம் கோரிக்கதிருத்துறைப்பூண்டி நகரில் தேசிய மற்றும் தனியார் வங்கி களின்10 ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் நேரடியாக வரும் கூட்டத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி ரோடு ஓரங்களில்ஏடிஎம் எந்திரங்களை 24 மணி நேரம் இயக்கி பணம் எடுக்க வசதியாக தேசியதனியார் வங்கிகளை ஏடிஎம் எந்திரங்கள் அமைக்க அனுமதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும். இதன்படி சிசி டிவியும் கேமராவுடன்அமைக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம்களை முறையாக பராமரி க்கவில்லை.

    இரவு நேரங்களில் பணம் இருப்பதில்லை.

    டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    கோளாறுகளை உடன் சீர் படுத்துவதில்லை.

    அவசரமாக மருத்துவமனை க்குசெல்லும் நோயாளிகள் மற்றும்வெளியூர் பயனாளிகள் ஆகியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாமல் தடுமாறு கின்றனர்.

    இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகாரும் வந்துள்ளது.

    ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏடிஎம் எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
    • காட்டெருமைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுவதை கண்டறிய உதவும் நவீன கருவியை கண்டறிந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    அதில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுவதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் நவீன கருவியை கண்டறிந்துள்ளனர்.

    தொடர்ந்து வீடுகள் மற்றும் தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறையும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையிலும் மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றையும் கண்டுபிடித்து மாணவிகள் அசத்தியுள்ளனர்.

    இந்த‌ செய‌லி மூல‌ம் த‌ன‌து பாதுகாவ‌ல‌ருக்கு தான் ஆப‌த்தான‌ நிலையில் உள்ள‌தாக‌ த‌க‌வ‌ல் அளிக்கும் வ‌கையில் க‌ண்டுபிடிக்க‌ப்பட்டுள்ளது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து தைவான் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் 2 மாணவிகள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகவும்,

    கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி படிப்பை முடித்த மாணவிகள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இணையலாம் எனவும் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    ×