search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devaneya pavanar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர்.
    • தமிழின் உண்மையான பணிகளுக்காக வழிகாட்டிய தமிழுணர்வாளர்.

    சென்னை:

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர். தி.மு.க. அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்.

    தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம், தமிழர் திருமணம், திருக்குறள் உரை எனத் தமிழின் தனிச்சிறப்பை நிறுவ தனிமனிதப் பல்கலைக்கழகமாக அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டை அவரது பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்தார்.
    • பரிபூரணத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்தார்.

    அதை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கியிருந்தார்.


    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைபாட்டால் பரிபூரணம் உயிரிழந்தார். இந்நிலையில் பரிபூரணம் அரசு வேலையில் இருந்தபோது மறைந்ததால் அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தேவநேயப் பாவாணர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவநேய பாவாணர் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    ×