search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Description of action"

    • பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.
    • கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் விநியோகஸ்தர் செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். செல்வி கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் சின்னராசு வரவேற்றார்.

    எரிவாயுவை கவனமாக கையாளுவது, எரிவாயு பாதுகாப்பு சிக்கனம் குறித்து செல்வி கியாஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் அய்யப்பன் விளக்கி பேசினார். தொடர்ந்து கியாசை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த கேள்விகளுக்கு சரியான முறையில் விடை அளித்த மாணவிகளுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேல் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். இந்த முகாமானது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர்(எல்.பி.ஜி.) பிரகாஷ் மீனா மற்றும் துணை மேலாளர் (எல்.பி.ஜி) அபிஜித் பி. விஜய் ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.

    • செயல் விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
    • நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேளாண் மாணவர்கள் நிலக்கடலையில் மகசூலை அதிகரிக்க வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் துறை வெளியிட்டுள்ள நிலக்கடலை ரிச் என்னும் நுண்ணூட்டக் கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இந்தசெயல்விளக்கக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    மேலும் இக்கூட்டத்தில் நிலக்கடலை ரிச் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலக்கடலை ரிச் ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ என்னும் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். இதனை நிலக்கடலையில் பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் தெளிக்க வேண்டும். இதனை தெளிப்பதன் மூலம் பயிர்களில் பூ உதிர்தலை கட்டுப்படுத்தலாம். மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் 9 பேர் செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முகாமிட்டு விவசாயிகளோடு தங்களுடைய விவசாய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
    • நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சரவணன் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை செய்துள்ளார். செங்கோட்டை பகுதியில் விவசாயிகள் பிசான நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் வரிசை நடவில் நடப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி திடல்களில் களை கட்டுப்பாட்டினை கோனோ வீடர் என்ற உருளும் களை கருவிக் கொண்டு எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை செயல் விளக்கம் செய்து காட்டினார்.

    நிகழ்ச்சிக்கு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் தலைமைதாங்கினார். இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பு மாணவர்கள் ரகுநந்தன், சஞ்சீவி, வெயிலுமுத்து குமரன், துரைப்பாண்டி, வல்லரசு, மணிகண்டன், ராஜ் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்
    • கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் 2022-23 ஆண்டில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு(அரிசி) செயல் விளக்கத்திடல் ஆனது திருந்திய நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்தல் பற்றியும், உயிர் உரங்கள் நுண்ணூட்டம் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலையின் பச்சைய தன்மை பொறுத்து யூரியா உரத்தினை பயன்படுத்துவதால் அதிகளவு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது. நுண்ணூட்டக் கலவை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி சீராக்கப்பட்டு தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிய முறையில் எடுத்துச் செல்லவும் வழி வகை செய்கின்றன என உணவு மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகர் சர்புதீன் விவசாயிகள் மத்தியில் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்டக் கலவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மத்தியில் கூறினார்கள். விராலிமலை வேளாண்மை விரிவாக்கம் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.


    • வேளாண் துறை சார்பில் நடைபெற்றது
    • விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராமத்தில் நெல் பயிரில் பச்சை வண்ண இலை அட்டை குறித்த செயல் விளக்கத்தை, வேளாண் கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை பூச்சி குறித்த பயன்பாடு செயல் விளக்கம் அளித்தனர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர் நக்கீரன் வழிகாட்டுதல் படியும், கந்தர்வகோட்டை வேளாண் உதவி இயக்குனர் அன்பரசன், மற்றும் வேளாண் உதவி அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையிலும், விவசாயிகளுக்கு நெற்பயிரில் பச்சை வண்ண இலை அட்டை உபயோகிக்கும் முறையை பற்றியும், அதன் பயன்பாடுகள் பற்றியும், திருந்திய நெல் சாகுபடியின் முக்கியத்தை பற்றியும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


    ×